»   »  வாய் பிளக்க வைக்கும் சிவகார்த்திகேயன்... ஒரு மில்லியனைத் தாண்டிய ரெமோ ட்ரைலர்!

வாய் பிளக்க வைக்கும் சிவகார்த்திகேயன்... ஒரு மில்லியனைத் தாண்டிய ரெமோ ட்ரைலர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஏழே படங்களில் நடித்த சிவகார்த்திகேயன் இப்போது அஜீத், விஜய் வரிசைக்கு வந்துவிட்டார். அவரது ரெமோ படத்துக்குக் கிளம்பியிருக்கும் எதிர்ப்பார்ப்பும், நடந்திருக்கும் வர்த்தகமும் தமிழ் சினிமாவை வாய்ப் பிளக்க வைத்திருக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன் ஹீரோவாகி, 30, 40 படங்கள் பண்ண பிறகும் ஸ்டெடியாக முடியாமல் நிற்கும் பிரபல ஹீரோக்கள் காதுகளில் லேசாகப் புகை வருமளவுக்கு சிவகார்த்திகேயன் வளர்ச்சி இருக்கிறது.

Sivakarthikeyan's Remo Trailer crosses 1 million views

அவரது ரெமோ படத்தின் முதல் ட்ரைலர் நேற்று வெளியானது. வெளியான வேகத்தில் 24 மணி நேரத்துக்குள் 12 லட்சத்தைத் தாண்டி பிரமிக்க வைத்துள்ளது.

விஜய், அஜீத் படங்களின் ட்ரைலர்களுக்குக் கிடைக்கும் வரவேற்புக்கு இணையானது இது. ட்ரைலரும் ரொம்பவே சுவாரஸ்யமாக இருப்பதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அல்லாதோரும் விரும்பிப் பார்த்து சூப்பர் ஹிட்டடிக்க வைத்துள்ளனர்.

ரஜினியின் மெகா பேனருடன் தொடங்கும் இந்த ட்ரைலரில், முடிந்த அளவுக்கு பல காட்சிகளிலும் ரஜினியின் படத்தைப் பயன்படுத்தியுள்ளார் சிவா. ஒரு சாமானியன் சூப்பர் நடிகனாவதுதான் படத்தின் கதை. ஸோ... சிவா எப்படியெல்லாம் 'விளையாடியிருப்பார்' என்பதை யூகிக்க முடிகிறதல்லவா!

English summary
Sivakarthikeyan's Remo Trailer has crossed 1 million views with in just 24 hours.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil