»   »  இப்படியாக சிவகார்த்திகேயன் ஆசை நிறைவேறியது!

இப்படியாக சிவகார்த்திகேயன் ஆசை நிறைவேறியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அண்மையில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த ரெமோ படத்தின் ட்ரைலரின் ஆரம்பக் காட்சியில் சத்யம் தியேட்டர் முன் வைக்கப்பட்டிருக்கும் மெகா ரஜினி பேனரைப் பார்த்தபடி இப்படிச் சொல்வார் சிவகார்த்திகேயன்...

"நம்ம தலைவர் மாதிரி இதே சத்யம் தியேட்டர்ல நம்ம பேனரும் வரணும்..."


Sivakarthikeyan's wish fulfilled

ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்துக்குள் அதே சத்யம் தியேட்டர் முன்பு, ரஜினியின் கபாலி பேனர் வைக்கப்பட்ட அதே இடத்தில் இப்போது சிவகார்த்திகேயனின் ரெமோ பட பேனர் வைக்கப்பட்டுள்ளது.


நிச்சயமாக இப்படி ஒரு வளர்ச்சியை... தமிழ் சினிமா மட்டுமல்ல, சிவகார்த்திகேயனே கூட எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்.


Sivakarthikeyan's wish fulfilled

ஒரு சாமானிய இளைஞனின் அசாதாரண வளர்ச்சி இது.


'கீழருந்து மேல
ஏறி வந்துட்டானே


நேத்தப் போல இல்ல
ஆளே மாறிட்டானே..."


-ரெமோ ட்ரைலரில் இடம்பெற்றுள்ள சில வரிகள் இவை. இனிமேல்தான் கவனமா இருக்கணும்... ஆள் மாறலாம்.. குணம் மாறாம பாத்துக்கணும் ரெமோ!

English summary
Sivakarthikeyan's long wish to get a place for his banner in front of Sathyam has fulfilled through Remo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X