»   »  ரெமோ படத்திற்கு கீர்த்தி வேண்டவே வேண்டாம்: அடம்பிடித்த சிவகார்த்திகேயன்

ரெமோ படத்திற்கு கீர்த்தி வேண்டவே வேண்டாம்: அடம்பிடித்த சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரெமோ படத்தில் கீர்த்தி சுரேஷே தனக்கு ஜோடியாக்க வேண்டாம் என சிவகார்த்திகேயன் இயக்குனரிடம் தெரிவித்துள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்த ரெமோ கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


இந்நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில்,


கீர்த்தி

கீர்த்தி

கீர்த்தி சுரேஷுடன் பணியாற்றுவது சவுகரியமாக உள்ளது. அவர் ஒரு திறமையான நடிகை. ரஜினி முருகன் படத்தை அடுத்து ரெமோவிலும் அவருடன் சேர்ந்து நடித்துள்ளேன்.
கிசுகிசு

கிசுகிசு

ரஜினி முருகன் படம் வெளியாவதற்குள் ரெமோவில் நான் ஒப்பந்தம் ஆனேன். ரஜினி முருகனே ரிலீஸாகாத நிலையில் அந்த படத்தில் நடித்த அதே நடிகையை ரெமோவிலும் நடிக்க வைத்தால் கிசுகிசு வந்துவிடுமே என பயந்தேன்.


பயம்

பயம்

சிவகார்த்திகேயன், கீர்த்தியை வைத்து கிசுகிசு வந்தால் அந்த நடிகையின் கெரியரே கெட்டுவிடும் என நினைத்தேன். ஏன் அவர்களுக்கு இனி பட வாய்ப்புகளே வராமல் கூட போகலாம் என அஞ்சினேன்.


வேண்டாம்

வேண்டாம்

ரெமோவில் கீர்த்தி வேண்டாமே என இயக்குனரிடம் கூறினேன். அவரோ இந்த படத்திற்கு கீர்த்தி தான் சரியாக இருப்பார், அடுத்தவர்கள் பேசுவதை எல்லாம் கண்டுகொள்ளாதீர்கள் என்று கூறி அவரை ஒப்பந்தம் செய்தார்.


English summary
Sivakarthikeyan said that he asked Remo director Bakkiyaraj Kannan not to make Keerthy Suresh as his heroine.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil