»   »  இனி என் படங்களில் 'அந்த மாதிரி காட்சிகளே' இருக்காது! - அப்டி போடுங்க சிவகார்த்திகேயன்!!

இனி என் படங்களில் 'அந்த மாதிரி காட்சிகளே' இருக்காது! - அப்டி போடுங்க சிவகார்த்திகேயன்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இனி சிவ கார்த்திகேயன் குடிக்க மாட்டார்!- வீடியோ

'பிரிக்க முடியாதது என்னவோ...

தமிழ் சினிமாவும் டாஸ்மாக்கும்...'

-இன்றைக்கு நவீன திருவிளையாடல் காட்சி வைத்தால் இப்படித்தான் கேள்வி பதில் இருக்கும். அந்த அளவு நீக்கமற நிறைந்துவிட்டது டாஸ்மாக் காட்சிகள். மிக சர்வ சாதாரணமாக குடிக்கும் காட்சிகளை வைக்கிறார்கள். அதற்கு அனைவரும் பார்க்கக் கூடிய யு சான்றிதழும் தருகிறது சென்சார்.

Sivakarthikeyan says No to TASMAC scenes

இளைய சமுதாயத்தை குடியை நோக்கி தள்ளும், சீரழிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்றாக இத்தகைய சினிமா காட்சிகள் உள்ளன என எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் எந்த இயக்குநரும் காதில் வாங்குவதாக இல்லை.

சீனியர் நடிகர்களான ரஜினி, விஜய் போன்றவர்கள் இப்போது தங்கள் படங்களில் அந்த மாதிரி காட்சிகள் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

"முன்பெல்லாம் டாஸ்மாக் காட்சிகளில் நடிப்பதை ஒரு ஜாலியாக நினைத்தேன். ஆனால் இப்போதுதான் அதன் கொடிய தாக்கம் எனக்குப் புரிகிறது. போதும்... இனி என் படங்களில் இந்த மாதிரி எந்தக் காட்சியும் இருக்காது. என் இயக்குநர்களும் இனி அத்தகைய காட்சிகளை எனக்கு மட்டுமல்ல, வேறு கேரக்டர்களுக்கும் வைக்க மாட்டாரகள்," என்றார்.

பலே சிவா!

English summary
Actor Sivakarthikeyan says that he never appears in TASMAC scenes in his forthcoming movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X