டான் படம் பார்த்து விட்டு கண்ணீர் விட்டாரா ரஜினி...சிவகார்த்திகேயன் சொன்ன சுவாரஸ்ய தகவல்
சென்னை : டான் படம் பார்த்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்ணீர் விட்டு அழுததாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறி உள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இது எப்போ நடந்தது. ஒன்றுமே தெரியவில்லையே என அனைவரும் கேட்டு வருகிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார். டாக்டர் படத்திற்கு பிறகு அவர் நடித்த டான் படம் சமீபத்தில் ரிலீசானது. பள்ளி பருவ மற்றும் கல்லூரி கால அனுபவங்களை நினைவுப்படுத்தும் படமாக டான் படம் அமைக்கப்பட்டிருந்தது.
அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கிய இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்தனர். இதில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்களிடமும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு வாரத்தில் 50 கோடி வசூல்
டான் படம் வெற்றிகரமாக ஓடி, நல்ல வசூலை பார்த்துள்ளது. ரிலீசான முதல் 5 நாட்களில் இந்தியாவில் மட்டும் டான் படம் 39.34 கோடியை வசூல் செய்துள்ளது. 6வது நாளில் அனைத்து மொழிகளிலும் 3 கோடிகளை இந்த படம் வசூல் செய்துள்ளது. மொத்தமாக 42.34 கோடிகளை ஒரே வாரத்திற்குள்ளாக வசூல் செய்துள்ளது டான் படம். உலகம் முழுவதும் 50 கோடி வசூலை 3 நாட்களில் கடந்து விட்டது டான் படம்.

கொண்டாடிய டான் டீம்
முதல் வாரத்திலேயே 50 கோடிகளை நெருங்கி வருவதால் படக்குழு செம குஷியாகி உள்ளனர். படத்தின் வெற்றியை டான் படக்குழுவினர் பெரிய சைஸ் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி செம டிரெண்டிங் ஆனது. டான் படத்தை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

கண்ணீர் விட்டாரா ரஜினி
இந்நிலையில் சமீபத்தில் ஆங்கில சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த சிவகார்த்திகேயன், டான் படம் பார்த்து விட்டு ரஜினிகாந்த் போன் செய்து பாராட்டியதாகவும், படக்குழுவிற்கு வாழ்த்து சொன்னதாகவும் கூறினார். பேட்டியில் அவர் கூறுகையில், பலரும் போன் செய்து வாழ்த்தினர். அதில் முக்கியமான போன், ரஜினி சாரிடம் இருந்து வந்தது. படம் பார்த்து விட்டு, சூப்பர் சூப்பர் Fantastic . Very good ஆக்டிங். படத்தின் கடைசி 30 நிமிடங்கள் என்னால் கண்ணீரை கன்ட்ரோல் பண்ண முடியவில்லை என்றார் என சொன்னார் சிவகார்த்திகேயன்.

சந்தோஷத்தில் சிவகார்த்திகேயன்
டான் படத்தில் 8 இடங்களில் ரஜினியின் Reference இருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார். டான் படத்தை பார்த்து விட்டு ரஜினியே கண்ணீர் விட்டு அழுததாக சொன்ன விஷயம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. தந்தை - மகன் பாசத்தை சொல்வதாக அமைக்கப்பட்டுள்ள இந்த க்ளைமாக்சை அனைவரும் பாராட்டினாலும், ரஜினியிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டை பெற்றதை அளவில்லாத சந்தோஷத்துடன் சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











