சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தை இந்த காரணத்திற்காக நீங்கள் பார்க்கலாம்..அவசியம் பாருங்க!
சென்னை : தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் பிரின்ஸ்.
தமிழ், தெலுங்கு இருமொழியில் படம் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாக உள்ளார்.
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் திரையரங்குகளில் பார்க்க சுவாரசியமான சில முக்கிய காரணங்கள்.

பிரின்ஸ்
சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கு பிறகு திரையரங்கில் பிரின்ஸ் திரைப்படம் வெளியாக உள்ளது. டான் படத்தில் மாணவனாக நடித்திருந்த சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தில் ஆசிரியராக நடிக்கிறார். ஆசிரியர் என்றதும் பயந்துவிடாதீங்க இவர் ஜாலியான ஆசிரியர்தான் இதனால் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

அட்டகாசமான கதை
தமிழ்நாட்டுப் பையனுக்கும் பிரிட்டிஷ் பொண்ணுக்கும் காதல் வந்தால் எப்படியிருக்கும் என்ற சிம்பிளான கதை தான் பிரின்ஸ் படத்தின் கதை. காதல் கல்யாணத்தில் போய் முடிகிறதா? இல்லை என்னாகும் என்பதை சிறப்பான கதைக்களத்துடன் படம் அட்டகாசமாக ரெடியாகி உள்ளது.

மரியா ரியாபோஷப்கா
இந்தப் படத்தில் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.. அவர் பள்ளி ஆசிரியராக நடித்திருப்பதால், கவர்ச்சி இருக்காது. ஆனாலும், சிவகார்த்திகேயனுடன் தமிழ் உரையாடல்கள் மற்றும் நகைச்சுவை காட்சிகளால் அவர் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேம்ஜி தான் வில்லன்
ஹீரோவாகவும், துணை நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வந்த பிரேம்ஜி அமரன், பிரின்ஸ் படத்தில் வில்லனாக நடிக்கிறார். வில்லனும் வலிமையானவன், ஹீரோவும் வலிமையானவன் என்பதால் படம் மிகவும் சுவாரசியமானதாக இருக்கும். இதுமட்டும் இல்லாமல் பிரேம்ஜியை வில்லனாக பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

தமன் இசை
சிவகார்த்திகேயனுக்காக முதன்முறையாக தமன் பிரின்ஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டான நிலையில், இப்படத்திலிருந்து மூன்றாவது பாடலான 'நான் யாரு' பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. துடிப்பான இசையமைப்பாளர் தமன் இப்படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார்.


Click it and Unblock the Notifications











