“இதுதான் எனக்கு முதல் தீபாவளி ரிலீஸ்”: பிரின்ஸ் ட்ரெய்லர் அப்டேட் கொடுத்த சிவகார்த்திகேயன்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ம் தேதி வெளியாகிறது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள பிரின்ஸ் படத்தை அனுதீப் இயக்கியுள்ளார்.

இந்நிலையில், பிரின்ஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் அப்டேட் கொடுத்துள்ளார்.

பிரின்ஸ் தீபாவளி

பிரின்ஸ் தீபாவளி

டாக்டர், டான் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து டாப் கியரில் சென்றுகொண்டு இருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது அவர் நடித்து முடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ம் தேதி வெளியாகிறது. அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ள குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாகிறார். மேலும் பிரின்ஸ் படத்திற்காக அவரே தெலுங்கிலும் டப்பிங் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், நேரடியாகவே இப்போது களமிறங்குகிறார்.

ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

ட்ரெய்லர் ரிலீஸ் தேதி

ரொமாண்டிக்கல் ஜானரில் கமர்சியலாக உருவாகியுள்ள பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். அதேபோல், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரின்ஸ் ட்ரெய்லரும் ஆடியோவும் நாளை (அக் 9) வெளியாகிறது. சென்னையில் உள்ள ஜேப்பியார் இன்ஜினியரிங் காலேஜ்ஜில் பிரின்ஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல் தீபாவளி ரிலீஸ்

முதல் தீபாவளி ரிலீஸ்

பிரின்ஸ் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து சிவகார்த்தியேன் வெளியிட்டுள்ள வீடியோவில், முதலில் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். டாக்டர், டான் படங்களை வெற்றிப் பெற செய்ததற்கு நன்றி கூறியுள்ள சிவகார்த்தியேன், பிரின்ஸ் படம் தான் எனக்கு முதல் தீபாவளி ரிலீஸ் என்பதால் ரொம்பவே ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படம் செம்ம ஜாலியாக இருக்கும் எனவும், அதேபோல் மிக முக்கியமான மெசேஜ்ஜும் இருப்பதாக சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். இந்த வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

சர்தாருடன் மோதல்

சர்தாருடன் மோதல்

நாளை நடைபெறும் பிரின்ஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழா, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. இதனிடையே கார்த்தியின் சர்தார் படமும் தீபாவளிக்கு வெளியாகிறது. சிவகார்த்திகேயனின் பிரின்ஸும் கார்த்தியின் சர்தாரும் தீபாவளி ரேஸில் களமிறங்கியுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X