»   »  இன்னொரு ரஜினி படத் தலைப்பும் அவுட்... இந்த முறை சிவகார்த்திகேயன்!

இன்னொரு ரஜினி படத் தலைப்பும் அவுட்... இந்த முறை சிவகார்த்திகேயன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தொடர்ந்து ரஜினி படத் தலைப்புகளை காலி செய்து வருகின்றனர் இளம் ஹீரோக்கள்.

சிவகார்த்திகேயன் - மோகன் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் புதிய படத்திற்கு 'வேலைக்காரன்' என்று தலைப்பிட்டுள்ளனர்.

Sivakarthikeyan takes another Rajini movie title

இந்தப் படத்தின் முதல் போஸ்டர் வருகின்ற தொழிலாளர் தினம் அன்றும், திரைப்படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்றும் உலகமெங்கும் வெளியாகின்றது.

சிவகார்த்திகேயன் - ஆர் டி ராஜா கூட்டணியில் உருவான 'ரெமோ' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது இருவரும் இந்த வேலைக்காரன் படத்திற்காக, மோகன் ராஜாவுடன் கைகோர்த்துள்ளனர்.

பாஹத் பாசில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

1987-ம் ஆண்டு ரஜினி - அமலா நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் வசூல் சரித்திரம் படைத்த படம் வேலைக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே ரஜினி மருமகன் தனுஷ், தீவிர ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் ரஜினி படத் தலைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர் (பொல்லாதவன், படிக்காதவன், மாப்பிள்ளை, தங்கமகன், ராஜாதி ராஜா, மூன்று முகம்... இன்னும் பல). அந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு சிவகார்த்திகேயன்.

English summary
Sivakarthikeyan's next movie has been titled as Velaikkaran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil