»   »  ஹாட்ரிக் வெற்றிக்கு பிளான் பண்ணும் சிவகார்த்திக்கேயன்- பொன்ராம் கூட்டணி

ஹாட்ரிக் வெற்றிக்கு பிளான் பண்ணும் சிவகார்த்திக்கேயன்- பொன்ராம் கூட்டணி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் பட வெற்றிகளைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சிவகார்த்திக்கேயன் - பொன்ராம் வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிமிக்ரி கலைஞராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய சிவகார்த்திக்கேயன், பின்னர் நிகழ்ச்சித் தொகுப்பாளராகி, இன்று தமிழில் வெற்றிப்பட நாயகராக வலம் வருகிறார்.

சிவகார்த்திக்கேயனின் படங்கள் அனைத்தும் வயது வித்தியாசமின்றி அனைவரும் ரசிக்கும்படி இருப்பது அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம்...

வருத்தப்படாத வாலிபர் சங்கம்...

அதிலும் குறிப்பாக இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினி முருகன் என இரண்டு படங்களுமே நல்ல வசூலைத் தந்தன.

ரெமோ...

ரெமோ...

இந்நிலையில் தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ரெமோ என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திக்கேயன். இதில் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் அவர் நடிக்கிறார். ரெமோவைத் தொடர்ந்து மோகன்ராஜா இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

மீண்டும் வெற்றிக் கூட்டணி...

மீண்டும் வெற்றிக் கூட்டணி...

அந்தப் படத்தை அடுத்து மீண்டும் பொன்ராம் இயக்கத்தில் புதிய படமொன்றில் சிவகார்த்திக்கேயன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தப் படமும் நகைச்சுவை கலாட்டா கதையாக உருவாக இருப்பதாக தெரிகிறது.

லாரன்ஸ்...

லாரன்ஸ்...

முன்னதாக ரஜினிமுருகன் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பொன்ராம், நடிகர் லாரன்ஸை சந்தித்ததாக கூறப்பட்டது. இதனால், அவரது புதிய படத்தில் லாரன்ஸ் நாயகனாக நடிப்பார் எனத் தகவல்கள் வெளியானது.

ஹாட்ரிக் வெற்றி...

ஹாட்ரிக் வெற்றி...

ஆனால், தற்போது லாரன்ஸ் அவரது படத்தில் நடிக்கவில்லை என நம்பத் தகுந்த தகவல்கள் கூறுகின்றன. இதனால், ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகி வருகிறது சிவகார்த்திக்கேயன், பொன்ராம் கூட்டணி எனலாம்.

English summary
Sources say that Director Ponram will again be teaming with Sivakarthikeyan and apparently the Maan Karate hero will join Ponram after he is done with Mohan Raja’s project. If this project comes through, it will be a hat trick of sorts for the director-hero combo.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil