ஜெய் படத்திற்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்... எண்ணித்துணிக டீசர் அப்டேட்!
சென்னை : இதுவரை நடிகராக கலக்கிக் கொண்டிருந்த ஜெய் சிவசிவா படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார்.
நீயா 2 படத்திற்குப் பிறகு மீண்டும் மற்றுமொரு ஹாரர் படத்தில் ஜெய் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் இயக்கி எஸ் கே.வெற்றிச்செல்வன் இயக்கி வருகிறார்.
திகில் கிளப்பும் ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள எண்ணித் துணிக படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார் என்ற டக்கரான அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஆக்ஷன் அவதாரம்
பார்த்தவுடனேயே பிடித்து விடும் பக்கத்து வீட்டு பையன் முகம், இயல்பான நடிப்பு,வெகுளித்தனமாக பேச்சு என ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெய் காதல் நாயகனாக இதுவரை வலம் வந்து கொண்டிருக்க இப்போது ஆக்ஷன் படங்களில் நடித்து ஆக்ஷன் அவதாரம் எடுத்து வருகிறார். இந்த வகையில் சுசீந்திரன் இயக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒரு படத்திற்கு சிவசிவா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணைய தளத்தில் சக்கை போடு போட்டது. இதுவரை நடிகராக வலம் வந்த ஜெய் சிவசிவா படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார்.

எண்ணித் துணிக
நீயா 2 என்ற திகில் படத்தில் நடித்திருந்த ஜெய் அதன்பிறகு மீண்டும் ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் எஸ் கே வெற்றிச்செல்வன் இயக்கி வரும் இப்படத்திற்கு "எண்ணித் துணிக" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹாரர் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வரும் எண்ணித் துணிக படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இதில் ஜெய்க்கு ஜோடியாக நடிகை அதுல்யா ரவி நடித்துள்ளார். ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஏற்கனவே கேப்மாரி என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இப்பொழுது இரண்டாவது முறையாக இந்த ஜோடி இணைகிறது.

திகில் படத்தில்
இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாடல் காட்சிகள் மட்டும் அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது எனக்கூறப்படுகிறது. எண்ணித் துணிக நடுங்க வைக்கும் திகில் படமாக உருவாகியிருக்கும் நிலையில் இதில் வம்சி கிருஷ்ணா,அஞ்சலி நாயர், சுனில் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெயின் ஆஃப் ஏரோஸ் என்ட்டெர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரித்து இருக்க, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். எஸ். தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்
அனைத்துக் கட்ட படப்பிடிப்பு பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள எண்ணித் துணிக படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் செப்டம்பர் 9ம் தேதி மாலை 7 மணிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக வெளியிடுகிறார் என்ற டக்கரான அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











