சிவகார்த்திகேயன் நடிக்கும் தெலுங்கு படத்தில் இவர் தான் ஹீரோயினா ?
சென்னை : கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் கடைசியாக 2019 ல் ஹீரோ படத்தில் நடித்தார். அதற்கு பிறகு இவர் நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. படங்கள் தயாராக இருந்தாலும் கொரோனா காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்து வருகின்றன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளி போகிறது. அதைத் தொடர்ந்து அயலான் படமும் ரிலீஸ் தயாராகி வருகிறது.

தெலுங்கிற்கு செல்லும் சிவகார்த்திகேயன்
தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதால் இவைகள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அத்துடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.

பான் இந்தியா படமாக உருவாகிறதா
ஏற்கனவே கூறப்பட்டதை போல் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தெலுங்கு படம் தானாம். இந்த படத்தை ஜதிரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் தான் இயக்க போகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இந்த படம் இந்தி மற்றும் மலையாளத்திலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம்.

இவர் தான் ஹீரோயினா
இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாராம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

தமிழ் ரசிகர்களும் ரசிப்பார்கள்
தமிழில் அறிமுகமான முதல் படமான சுல்தானில் கார்த்தியுடன் இணைந்து நடித்த ராஷ்மிகா, இப்போது சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர உள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களிடம் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











