»   »  ஜல்லிக்கட்டுக்கு சீனியர் கமல், ஜூனியர் சி.கா. ஆதரவு: அப்போ ரஜினி?

ஜல்லிக்கட்டுக்கு சீனியர் கமல், ஜூனியர் சி.கா. ஆதரவு: அப்போ ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவரது ட்வீட், 'ஏறுதழுவுதல் எம் தமிழர்களின் கலாச்சாரம்,பண்பாடு..அதை மீட்க விரும்பும் பல கோடிபேரில் ஒரு தமிழனாய் நானும்💪#WeNeedJallikattu'

கமல்

கமல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கொம்புவச்ச சிங்கம்டா பாடலை வெளியிடுகிறார் ஜி.வி. பிரகாஷ். ஜல்லிக்கட்டு என்று கூறாதீர்கள் ஏறுதழுவுதல் என்று கூறுங்கள் என உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்துள்ளார். காளைகளை தழுவுகிறோமே தவிர அவற்றை காயப்படுத்துவது இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிம்பு

சிம்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முதலில் அறிக்கை வெளியிட்டவர் நடிகர் சிம்பு தான். மேலும் ட்விட்டரிலும் தனது ப்ரொபைல் படம் மூலமும் ஜல்லிக்கட்டை ஆதரித்துள்ளார்.

ரஜினி

ரஜினி

ஜல்லிக்கட்டுக்கு கமல் ஹாஸன் எனும் சீனியர் ஆதரவு தெரிவித்துள்ளார், சிம்பு, ஜி.வி. பிரகாஷ், சிவகார்த்திகேயன் ஆகிய ஜூனியர்களும் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் ஏன் இது குறித்து எதுவும் கூறாமல் இருக்கிறார் என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுந்துள்ளது.

English summary
Actor Sivakarthikeyan too has supported Jallikattu like Kamal Haasan, Simbu and GV Prakash. Fans are questioning as to why Rajinikanth is silent over this issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil