மண்டேலா டீமுக்கு ட்ரீட் கொடுத்த சிவகார்த்திகேயன்...எதுக்கு தெரியுமா?

சென்னை : தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், பல படங்களில் நடித்து வருகிறார். எஸ்கே 20, எஸ்கே 21, மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Sivakarthikeyan treats Madonne Ashwin and Mandela team

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக டான் படம் வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது.அடுத்து இரு மொழிகளில் தயாராக உள்ள படத்திற்கு பிரின்ஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கே.வி.அனுதீப் இயக்குகிறார்.

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குகிறார்.இந்நிலையில் சமீபத்தில் மண்டேலா படத்திற்காக மடோன் அஸ்வினுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதற்காக டெக்னிக்கல் டீம் உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கு சிவகார்த்திகேயன் ட்ரீட் கொடுத்துள்ளார்.

தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட உடன் மண்டேலா படக்குழுவினர் சிவகார்த்திகேயனுடன் வீடியோ காலில் பேசியதாக மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அப்போது படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்த சிவகார்த்திகேயன், டின்னருக்கு வரும்படி படக்குழுவிற்கு அழைப்பு விடுத்தார். சமீபத்தில் நானும், எனது டீமும் சிவகார்த்திகேயனை சந்தித்தோம். அவர் எங்களுக்கு டின்னர் கொடுத்தார் என்றார்.

வீடியோ காலில் மட்டுமல்ல சிவகார்த்திகேயன் ட்விட்டரிலும் வாழ்த்தி இருந்தார். அதில், சமீப காலங்களில் வெளியானதில் எனக்கு மிகவும் பிடித்த படம் மண்டேலா. அந்த படத்திற்கு மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. இரண்டு தேசிய விருதுகளை வென்ற மடோன் அஸ்வினுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது பிரதர். இன்னும் நிறைய உயரங்கள் காத்திருக்கிறது சகோ என குறிப்பிட்டிருந்தார்.

தேசிய விருது கிடைத்தது பற்றிய சமீபத்தில் மீடியாக்களிடம் பேசிய மடோன் அஸ்வின், எதிர்பாராத இந்த விருது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல கன்டென்ட் உடன் ஓடிடியில் வெளியான சிறிய பட்ஜெட் படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இது எனக்கும் எனது டீமுக்கும் கிடைத்த அங்கீகாரம். இதை கொண்டாடும் தருணம்.

சிவகார்த்திகேயனை வைத்து மடோன் அஸ்வின் இயக்கும் படத்திற்கு மாவீரன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தான் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், விரைவில் இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது.இதற்கு முன் டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்கே 22 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X