Don't Miss!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Automobiles
மஹிந்திரா பொலிரோவை வாங்கும் பிளானில் உள்ளவர்கள் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனை வாங்கலாம்!! விலையும் குறைவு...
- Finance
SBI வங்கி சேவை 2 நாள் பாதிப்பு.. மக்களே உஷார்..!
- News
குறிச்சு வச்சுக்கோங்க.. 2024 நாடாளுமன்றத் தேர்தல்.. எனது ஆட்டத்தைப் பாருங்கள்.. எச்சரிக்கும் சீமான்!
- Lifestyle
நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
அட்ராசக்க.. சிவகார்த்திகேயனுக்கு பெரியப்பாவாக நடிக்கிறாரா கவுண்டமணி.. வந்தா செம கம்பேக்கா இருக்குமே!
சென்னை: வடிவேலு, செந்தில் உள்ளிட்டோர் மீண்டும் நடித்து வரும் நிலையில், கவுண்டமணியை நடிக்க வைக்கும் முயற்சியில் சிவகார்த்திகேயன் தீவிரமாக இறங்கி உள்ளதாக தகவல்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன.
சமீபத்தில் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியை சந்தித்து சிவகார்த்திகேயன் எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டானது.
அதற்கு பின்னணியில் இப்படியொரு கதை இருக்கு என தற்போது கோலிவுட் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
யம்மாடி...5
பில்லியன்
பார்வைகளா...அசத்தல்
சாதனை
படைத்த
புஷ்பா

83 வயசாகுது
1964ம் ஆண்டிலேயே நாகேஷ் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படமான சர்வர் சுந்தரம் படத்தில் கார் டிரைவராக நடித்து இருப்பார் கவுண்டமணி. 1977ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தில் தான் ஒரு நடிகராக அவர் அறிமுகமானார். கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தால், கன்னி ராசி, நடிகன், மன்னன், சூரியன், ஜென்டில்மேன், மன்மதன் என ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவையில் கலக்கி வந்த கவுண்டமணிக்கு தற்போது 83 வயதாகிறது.

ஓய்வில் இருக்கிறார்
கவுண்டமணி - செந்தில் காம்பினேஷன் இல்லாத படங்களே 80களிலும், 90களிலும் இல்லை என்கிற நிலை இருந்து வந்த நிலையில், தற்போது சினிமாவில் நடிக்காமல் சில காலமாகவே ஓய்வில் இருந்து வருகிறார். கடைசியாக 49 ஓ, எனக்கு வாய்த்த அடிமைகள் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். ஆனால், அந்த படங்கள் பெரிதாக போகாத நிலையில், மற்ற படங்களில் தலையை காட்டுவதை அவர் முற்றிலுமாக தவிர்த்து விட்டார்.

சந்தித்த சிவகார்த்திகேயன்
எப்போதாவது சில திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளும் கவுண்டமணியை சமீபத்தில் அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார் சிவகார்த்திகேயன். கவுண்டமணியின் ரசிகராக யார் தான் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள். நடிகர் சிவகார்த்திகேயனும் தீவிர கவுண்டமணி ரசிகர் தான். இந்நிலையில், அந்த சந்திப்புக்கு இன்னொரு முக்கிய காரணமும் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பெரியப்பா ரோல்
சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் அவருக்கு பெரியப்பாவாக நடிக்க நடிகர் கவுண்டமணியை அணுகி உள்ளதாகவும், அதற்கான சந்திப்பு தான் சமீபத்தில் நடைபெற்றதாகவும் தற்போது தகவல்கள் லீக்காகி உள்ளன. சிவகார்த்திகேயன் - சூரி, சிவகார்த்திகேயன் - சத்யராஜ், சிவகார்த்திகேயன் - சமுத்திரகனி காம்பினேஷனை எல்லாம் பார்த்து விட்ட நிலையில், சிவகார்த்திகேயன் - கவுண்டமணி காம்பினேஷனை சாதித்து காட்ட தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில், கவுண்டமணியிடம் ஓகேவும் வாங்கி விட்டாராம்.
Recommended Video

சில கண்டிஷன்கள்
அவுட்டோர் படப்பிடிப்பு இருக்கக் கூடாது, தனக்கான போர்ஷன்களை 25 நாட்களுக்குள் முடித்து விட வேண்டும், இரவு நேர படப்பிடிப்பு வைக்கக் கூடாது உள்ளிட்ட சில கண்டிஷன்களை கவுண்டமணி போட அனைத்துக்கும் ஓகே சொல்லி இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள மாவீரன் படத்தில் இந்த காம்பினேஷன் இருக்கப் போகிறதா? அல்லது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - கவுண்டமணி கலக்கப் போகிறார்களா? என்பது விரைவில் தெரிந்து விடும்.