அகில உலக சூப்பர் ஸ்டாரிடம் நடனம் கற்றுக் கொள்ள சென்ற சிவகார்த்திகேயன்
சென்னை: அகில உலக சூப்பர் ஸ்டாரிடம் நடனம் கற்றுக் கொள்ள சென்றுள்ளார் சிவகார்த்திகேயன்.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார், நடனப் புயல் சிவா நடித்து வரும் படம் தமிழ் படம் 2.0. படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் சம்பவங்கள் குறித்து அமுதன் காமெடியாக ட்வீட்டி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சதீஷை கலாய்த்திருந்தார் அமுதன்.
சிவா
சிவகார்த்திகேயன் தமிழ் படம் 2.0 செட்டுக்கு சென்றுள்ளார். அவர் சிவாவிடம் நடனத்தையும், சதீஷிடம் நடிப்பையும் கற்றுக் கொள்ள வந்ததாக அமுதன் ட்வீட்டியுள்ளார்.
ஹிட்
சிவா மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுக்குமாறு அமுதனுக்கு ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரிலீஸ்
மே தின வாழ்த்துக்கள் என்று அமுதன் ட்வீட்டியுள்ளதை பார்த்த ரசிகர்கள் தமிழ் படம் 2.0 மே மாதம் ரிலீஸாக உள்ளது என்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தீபாவளி
விஜய்யை வைத்து படம் எடுக்கும் ஏ.ஆர். முருகதாஸ் அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்பதை தீபாவளி வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டார். அமுதனோ பதிலுக்கு மே தின வாழ்த்து ட்வீட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











