கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்… வெளியானது மாஸ் அப்டேட்…

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ம் தேதி வெளியாகிறது.

பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மாவீரன், அயலான் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

SK தீபாவளி

SK தீபாவளி

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் 21ம் தேதி வெளியாகிறது. அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது. இந்தப் படம் மூலம் சிவகார்த்திகேயன் தெலுங்கிலும் நேரடியாக அறிமுகமாகிறார். இதனைத் தொடர்ந்து மாவீரன், அயலான் ஆகிய படங்களை முடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும், சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்ப்டுகிறது.

நடராஜன் பயோபிக்

நடராஜன் பயோபிக்

ரொமாண்டிக்கல் ஜானரில் கமர்சியலாக உருவாகியுள்ள பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். அதேபோல், சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரின்ஸ் ட்ரெய்லரும் ஆடியோவும் நாளை (அக் 9) வெளியாகிறது. சென்னையில் உள்ள ஜேப்பியார் இன்ஜினியரிங் காலேஜ்ஜில் பிரின்ஸ் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல் தீபாவளி ரிலீஸ்

முதல் தீபாவளி ரிலீஸ்

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரரான தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் வாழ்க்கை வராற்றை பின்னணியாகக் கொண்ட படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. இதனை கிரிக்கெட் வீரர் நடராஜனே கூறியுள்ளார். பிரபல தனியார் இதழுக்காக அவர் கொடுத்துள்ள பேட்டியில், என்னுடைய பயோபிக் எடுக்க நிறைய பேர் கேட்டுள்ளார்கள். ஆரம்பத்தில் நான் தயக்கத்தில் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இப்போதுதான் அதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட அது உறுதியாகிவிட்டது. அதில், சிவகார்த்திகேயன் நடிக்கிறார்" எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

எம்.எஸ் தோனி முதல் மிதாலி ராஜ் வரை பல கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை தற்போது திரைப்படங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் நடராஜனின் வாழ்க்கை பயணமும் சினிமாவாக வரவுள்ளது கிரிக்கெட் ரசிகர்களிடம், எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது. மேலும், அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனே நடிக்கவுள்ளது இன்னும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.

இயக்குநர் யார்?

இயக்குநர் யார்?

சிவகார்த்திகேயன் நடராஜன் பாத்திரத்தில் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் இயக்குநர், தயாரிப்பு நிறுவனம் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. ஏற்கனவே கிரிக்கெட்டை பின்னணியாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' படத்தை அருண்ராஜ் காமராஜ் இயக்கியிருந்தார். எனவே அவரே நடராஜனின் பயோபிக்கை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன், நடராஜன் இருவருக்கும் அருண்ராஜா காமராஜ் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X