»   »  இவ்ளோவா, நான் எதிர்பார்க்கவே இல்லை: வியப்பில் சிவகார்த்திகேயன்

இவ்ளோவா, நான் எதிர்பார்க்கவே இல்லை: வியப்பில் சிவகார்த்திகேயன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேலைக்காரன் ஸ்டைலில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Sivakarthikeyan wishes a happy new year

சிவகார்த்திகேயனை சீரியஸ் ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். படத்தில் வரும் ஒரு காட்சியில் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு அளித்து தியேட்டர்களில் ரசிகர்கள் தங்களின் செல்போன்களில் பிளாஷ் லைட்டை ஆன் செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,

வேலைக்காரனுக்கு இவ்வளவு ஆதரவு அளித்ததற்கு நன்றி. தியேட்டரில் பிளாஷ் லைட் எல்லாம் அடித்ததை நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்கள் இந்த நல்ல விஷயத்தை ஏற்றுக் கொண்டீர்கள்.

அதை பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மிக்க நன்றி. முதல் முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. 2017ம் ஆண்டை சந்தோஷமாக முடித்து வைத்துள்ளீர்கள். அந்த சந்தோஷத்தோடு அடுத்த ஆண்டுக்கு செல்கிறேன்.

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உலகின் தலை சிறந்த சொல் செயல் என்று தெரிவித்துள்ளார்.

English summary
Sivakarthikeyan is so touched by the extraordinary support given to his latest flick Velaikkaran directed by Mohan Raja. Sivakarthikeyan has thanked his fans and everyone for supporting his movie. He released a video on twitter thanking everyone.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X