Don't Miss!
- Automobiles
புதிய டொயோட்டா இன்னோவா காரின் டெலிவரி தொடங்கியது! இவ்ளோ மைலேஜ் தருமா! அதான் எல்லாரும் வரிசைல நிக்கறாங்க!
- News
+2,+11,10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்.. தமிழக பள்ளி மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் குட் நியூஸ்
- Lifestyle
தினமும் காலையில் இந்த 5 பானங்களை குடிச்சீங்கனா... உங்க எடை 'சர்ருனு' குறைஞ்சிடுமாம் தெரியுமா?
- Finance
தங்கம் விலை இன்று எப்படியிருக்கு தெரியுமா.. கூடியிருக்கா குறைஞ்சிருக்கா.. இனி எப்படியிருக்கும்?
- Technology
Cola Phone: கோகோ கோலாவின் முதல் ஸ்மார்ட்போன்.. டிவிஸ்ட் வைத்த ரியல்மி!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
தலைவா பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.. ரஜினியை வாழ்த்திய சிவகார்த்திகேயன்.. ரீசன்ட் க்ளிக்ஸ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
நள்ளிரவு முதலே ரஜினிக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் பல துறைகளை சேர்ந்த பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஜெயிலர் படத்தின் பிரத்யேக அறிமுக வீடியோவும் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
மக்களும்..
மகேசனும்
தான்
முடிவு
செய்யணும்..
அரசியல்
என்ட்ரிக்கும்
லெஜண்ட்
சரவணன்
ரெடியாகிறாரா?

சிவகார்த்திகேயன் படம் பார்த்துட்டு
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளியாகி ஹிட் அடித்த நிலையிலே, நெல்சன் உடன் ஒரு படம் பண்ணுவது என முடிவு செய்து விட்டார் ரஜினிகாந்த். விஜய்யின் பீஸ்ட் படம் சொதப்பிய நிலையிலும், கூட்டணியை ரஜினிகாந்த் மாற்றாமல் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் போல ஜெயிலர் ஸ்பெஷலா இருக்கும் என உறுதியுடன் உள்ளார்.

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன்
ஜெயிலர் பட நடிகர்களுடன் சிவகார்த்திகேயன் இருக்கும் போட்டோக்கள் சமீபத்தில் வெளியான நிலையில், ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு கேமியோ செய்கிறார் என்கிற தகவல்கள் பரவின. ஆனால், இதுவரை படக்குழு அது தொடர்பாக எந்தவொரு மூச்சும் விடாத நிலையில், ரஜினியை நேரில் சந்தித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ரஜினியை சந்தித்து வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரை நேரில் சந்தித்து "தலைவா ஹாப்பி பர்த்டே.. பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.. என்றென்றும் உங்கள் ரசிகன்" என கேப்ஷன் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

லேட்டஸ்ட் போட்டோவா?
சமீபத்தில் நடிகர் அஜித் உடன் சந்தித்த போட்டோவை ஷேர் செய்திருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால், அந்த போட்டோ எடுத்து ஒரு மாதம் ஆகிறது என சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில், இந்த போட்டோ இன்று எடுத்ததா? அல்லது முன்னதாகவே எடுத்த போட்டோவா? என நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனிடம் சந்தேக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

திருநள்ளாறு கோயிலில்
நடிகர் சிவகார்த்திகேயன் முன்னதாக திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு சென்றிருந்தார். அங்கே ரசிகர்கள் அவருடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன. சச்சின், ஷாருக்கான், தனுஷ், கமல்ஹாசன், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் ரஜினியை வாழ்த்திய நிலையில், சிவகார்த்திகேயன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக போட்டோக்களுடன் வாழ்த்தி உள்ளார்.