»   »  ரஜினிமுருகன், காக்கிச்சட்டையைத் தொடர்ந்து 'ரெமோ'வைக் கைப்பற்றிய சோனி மியூசிக்

ரஜினிமுருகன், காக்கிச்சட்டையைத் தொடர்ந்து 'ரெமோ'வைக் கைப்பற்றிய சோனி மியூசிக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் ரெமோ ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வரும் படம் ரெமோ. அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Sivakartikeyan Remo Grabbed by Sony Music

அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்து விட்டதாகவும், ஜூன் மாதத்திற்குள் மொத்தப் படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துவிடும் என்றும் படக்குழு வட்டாரங்கள் தெரிவிகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. அனிருத்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான எதிர்நீச்சல், மான் கராத்தே, காக்கிச்சட்டை படப்பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டடித்தன.

இதனால் ரெமோ படத்தின் பாடல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டே சோனி மியூசிக் நிறுவனம் இப்படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றியிருக்கிறது.

இதற்குமுன் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல், மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, ரஜினிமுருகன் போன்ற படங்களின் ஆடியோ உரிமையை இந்நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

English summary
Audio rights of Sivakartikeyan-Keerthy Suresh starrer REMO Grabbed by Sony Music.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil