twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் வாழ்க்கையில் மறக்க முடியாத கே.பி.... சிவக்குமாரின் நினைவாஞ்சலி

    |

    சென்னை: இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் குறித்த தனது நினைவுகளை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார், அவருடன் இணைந்து மூன்று படங்களைக் கொடுத்த நடிகர் சிவக்குமார்.

    உடல்நலக் குறைபாடால் அவதிப்பட்டு வந்த இயக்குநர் சிகர் கே.பாலசந்தர் கடந்தவாரம் காலமானார். தமிழ் சினிமாவில் தனக்கென நீங்காத இடம் பிடித்த கே.பாலசந்தர், பலரை திரையில் அறிமுகப் படுத்தியதோடு, பலருக்கு விருதுகள் கிடைக்க காரணமாகவும் இருந்தவர்.

    தொடர்ந்து பாலசந்தரின் மறைவுக்கு பிரபலங்கள் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடிகர் சிவக்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் பாலசந்தர் குறித்த தனது நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.

    அந்தப் பதிவிலிருந்து...

    கே.பி.சார் விடைபெற்றுக்கொண்டார்...

    கே.பி.சார் விடைபெற்றுக்கொண்டார்...

    நடிப்புலக வாழ்க்கையில் சிவாஜி, எம்.ஜி.ஆர் தொட்ட எல்லையை இயக்குநராகத் தொட்ட மேதை... 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாடகம் - திரை உலகம் - சின்னத்திரையில் ஆட்சி செய்தவர்..இவர் வாங்காத விருதுகள் - பட்டங்கள் எதுவும் இல்லை.

    ஏங்கிய சிறுவன்...

    ஏங்கிய சிறுவன்...

    திருவாரூர் அருகில் நல்லமாங்குடியில் கர்ணம் கைலாசத்தின் செல்லப் பிள்ளையாகப் பிறந்தார்.. வெள்ளைக்காரக் கலெக்டரிடமே ஆங்கிலத்தில் வெளுத்துக் கட்டுவார் தந்தையார். 4 பெண்கள், 2 பிள்ளைகள்.ஒரே ஜமுக்காள விரிப்பில் மொத்தக் குடும்பம் தூங்க வேண்டும். எனக்கு என்று பாய், தலையணை, போர்வை எப்போது கிடைக்கும் என்று ஏங்கிய சிறுவன்..

    நாட்டர்டேம் கூனன்...

    நாட்டர்டேம் கூனன்...

    12 வயதிலேயே 'நாட்டர்டேம் கூனன்' வேடமேற்று பரிசு தட்டிச் சென்றார். பி.எஸ்.ஸி-யில் முதல் வகுப்பில் தேர்ச்சி... 1949 -50 முத்துப்பேட்டையில் ஆசிரியர். 1951 -64 ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணி. அங்கேயே 'மேஜர் சந்திரகாந்த்' நாடகம் ஆங்கிலத்தில் எழுதி ஹீரோவாக நடித்தார்.

    நீர்க்குமிழி...

    நீர்க்குமிழி...

    ராகினி ரிக்ரியேஷன்ஸ் குழு துவக்கி - நீர்க்குமிழி - மெழுகுவர்த்தி- சர்வர் சுந்தரம் -'மேஜர் சந்த்ரகாந்த்' -எதிர்நீச்சல்- நவக்கிரகம் - நாடகங்கள் நடத்தி சென்னையைத் கலக்கினார். நீர்க்குமிழி - யில் துவங்கி 100-க்கும் மேற்பட்ட படங்களில் இயக்குநராக எழுத்தாளராக - பங்களிப்பு.

    நானும் ஒருவன்...

    நானும் ஒருவன்...

    கமல், ரஜினி, சுஜாதா, படாபட் ஜெயலட்சுமி, ப்ரியா, சரிதா, பிரகாஷ்ராஜ், விவேக், சுஹாசினி- என பெரிய பட்டாளத்துடன் நாகேஷ், மேஜர், சௌகார் - என எண்ணற்ற கலைஞர்கள் இவரால் பட்டை தீட்டப்பட்டனர். அடியேனும் அதில் ஒருவன்.

    பெண்மையைப் போற்றும் படங்கள்...

    பெண்மையைப் போற்றும் படங்கள்...

    1970-ல் அதிகபட்ச டென்சனில் மாரடைப்பு ஏற்பட்டு 6 மாதம் படுக்கை. அப்போது சத்தியம் செய்தார். இனி சிகரெட் தொடுவதில்லை- பிஸி நடிகர்கள் எனக்குத் தேவையில்லை -புது முகங்கள் போதும்- படத்தில் ஏதாவது ஒரு செய்தி சொல்ல வேண்டும் - ஆணாதிக்கம் மேலோங்கியுள்ள உலகில் என் படங்கள் இனி பெண்மையைப் போற்றும் விதமாக இருக்க வேண்டும்..

    மறக்க முடியாத படைப்புகள்...

    மறக்க முடியாத படைப்புகள்...

    கடைசி வரை இவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்து இந்த முடிவை கடைசி வரை காப்பாற்றினார். சொல்லத்தான் நினைக்கிறேன் - அக்னிசாட்சி - சிந்துபைரவி - என் வாழ்க்கையில் மறக்க முடியாத அவரது படைப்புக்கள்!!!!

    English summary
    Actor Sivakumar has remembered the late K Balachander in his facebook page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X