»   »  யாருக்குய்யா வேணும் உங்க ராக்கெட்டுங்க... முதல்ல தண்ணிக்கு வழிய பாருங்க!- சிவக்குமார்

யாருக்குய்யா வேணும் உங்க ராக்கெட்டுங்க... முதல்ல தண்ணிக்கு வழிய பாருங்க!- சிவக்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராக்கெட் விடுவதா இப்ப முக்கியம்... நதிகளை இணைத்து தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும் என்று நடிகர் சிவக்குமார் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு பருவமழை முழுசாகப் பொய்த்துவிட்டது. பல மாவட்டங்களில் விவசாயம் முடங்கியுள்ளது. பயிர்கள் கருகிக் கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியால் இறந்தும் வருகின்றனர்.

Sivakumar's statement

இந்த சூழலில் இந்தியா விண்வெளித்துறை 107 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி சாதனைப் படைத்துவிட்டதாக புளகாங்கிதமடைந்துள்ளது.

இதில் கடுப்பாகியுள்ள நடிகர் சிவகுமார் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் குடிக்க தண்ணீர் இல்லாமல் ஜனங்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். குடிப்பதற்கு மட்டுமில்லாமல், விவசாயத்துக்கே தண்ணீர் இல்லாததால் நிறைய பேர் கூலிக்காரனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கும் பூமி. நமக்கு நீராதாரம் வேண்டும். ஆனால், நடக்கக்கூடியது என்ன?

கர்நாடகாவில் மிச்சமிருக்கும் காவிரி நீரைத்தான் நமக்கு கொடுக்கிறார்கள். முல்லை பெரியாறு பக்கம் பார்த்தால் நீர்பிடிப்பு ஏரியாக்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கிறது. ஆனால், அணை கேரளாவில் இருக்கிறது. 10 அடி தண்ணீர் மேலே ஏற்றுவதற்கு அவர்கள் விடமாட்டேன் என்கிறார்கள்.

பாலாற்றில் வெறும் மணல்தான் இருக்கிறது. கண்டலேறுவில் குடிதண்ணீருக்கு பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஒரேயொரு வழிதான் இருக்கிறது. கங்கை காவிரி இணைப்புதான் அது. கங்கையாற்றிலும், யமுனையாற்றிலும் இருந்து 60 சதவீதம் தண்ணீர் வீணாக போகிறது. அந்த தண்ணீரை தெற்கு நோக்கி திருப்பினால் கண்டிப்பாக சுபிட்சமான வாழ்க்கை கிடைக்கும். அதற்கு பலகோடி செலவாகும் என்று சொல்கிறார்கள்.

செவ்வாய் கிரகத்துக்கு பலகோடிகள் செலவழித்து ராக்கெட் அனுப்பியிருக்கிறார்கள். 107 ராக்கெட்டுகளை ஏவியதாக பெருமை பேசுகிறார்கள்.

107 ராக்கெட் அனுப்புவது இப்போது நாட்டுக்கு முக்கியமா? மக்களுக்கு அடிப்படை தேவை தண்ணீர். அந்த தண்ணீருக்கு வசதி செய்துவிட்டு 10 வருடத்திற்கு பிறகு செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட்டை அனுப்பலாம். இன்னும் ஆயிரம் ராக்கெட்டுகளை ஏவலாம்.

தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கொண்டு வந்து காவிரி, தாமிரபரணி உள்ளிட்ட எல்லா கிளை நதிகளிலும் தண்ணீர் பாய்ந்தோடினால், ஆறு, குளம் எல்லாம் நிரம்பி விவசாயம் செழிக்கும். இதற்கு இந்தியாவின் பிரதமர்தான் வழிவகுக்கவேண்டும். தமிழக மக்கள் சார்பில் அதை நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சிவக்குமார்.

English summary
Actor Sivakumar urged the govt to give importance to interlinking rivers rather than sending rockets.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil