twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவப்பு பட சிறப்பு காட்சி: உரைக்கு நடுவே உணர்ச்சி வசப்பட்டு அழுத ராஜ்கிரண்!

    By Manjula
    |

    சென்னை: சிவப்பு படத்தின் சிறப்புக் காட்சியில் நடிகர் ராஜ்கிரண் பங்கேற்று பேசினார். பேச்சுக்கு நடுவே இலங்கைத் தமிழ் மக்களின் நிலையை நினைத்து அவர் கண்ணீர் சிந்த அந்த இடமே உணர்ச்சி மயமானது.

    இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நவீன்சந்திரா, ரூபா மஞ்ஜரி, ராஜ்கிரண் நடித்துள்ள படம் சிவப்பு. இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

    இப்படத்தின் சிறப்புக் காட்சியில் நடிகர் ராஜ்கிரண் பேசும்போது "இலங்கை போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அங்கு நடந்தது இனப்படுகொலை.

    Sivappu Movie Special Show

    இந்த சோகத்தை தமிழ்நாடு தவிர இந்தியாவில் வேறு எங்கும் மீடியாவில் வெளிவராதவண்ணம் இந்திய வெளியுறவு துறை தடுத்துவிட்டது. பாரதிய ஜனதா அரசு இந்துத்வா பற்றி பேசுகிறது.

    ஆனால் இலங்கையில் 2 ஆயிரம் கோயில்கள் இடிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததா? அதற்கு மாறாக ராஜபக்சேவுக்கு திருப்பதி கோயிலுக்கு வந்து செல்ல சிவப்பு கம்பளம் விரித்தது.

    தமிழ் இனம் வருங்காலத்தில் இருக்கக்கூடாது என்பதற்காக சிங்களர்களைவிட்டு தமிழ் பெண்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். இங்கு மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஒருவரை அடித்து கொல்கின்றனர்.

    ஆனால் லட்சக்கணக்கான தமிழர்கள் சாகடிக்கப்பட்டதை கேட்க மறுக்கின்றனர். வறுமையில் பெண்கள் சிலர் விபசாரம் செய்கின்றனர். இந்த கொடுமையை எல்லாம் படத்தில் காட்டக்கூடாது என்று தடை உள்ளது, ஆனால் இதையெல்லாம் உணர்த்தும் விதமாக சிவப்பு படம் உருவாகி உள்ளது.

    இவ்வாறு பேசிய ராஜ்கிரண் பேச்சுக்கு நடுவே உணர்ச்சி வசப்பட்டு கதறி அழ ஆரம்பித்தார், இதனால் அந்த இடமே சோகமயமானது. பின்னர் அவரிடம் அரசியல்பற்றி விமர்சிக்கிறீர்களே நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா? என்று பதிரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த ராஜ்கிரண் 'எனது கைகளில் ஒன்றும் இல்லை எல்லாம் ஆண்டவன் கையில் இருக்கிறது' என்று கூறினார்.

    சிவப்பு திரைப்படத்தை புன்னகைப்பூ கீதா தயாரித்திருக்கிறார். ரகுநந்தன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

    English summary
    Sivappu Movie Special Show: Actor Rajkiran Speaks about the Movie he slams Indian Government, After He is Crying Continuously. Before one Interview He said "It is a film that documents their sufferings’. The Lankan Tamils are silently suffering today and no film was made to chronicle their sufferings".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X