வியூஸ் முக்கியமில்லை.. பிழை இருக்கக் கூடாது.. அதிரடியாக சரி செய்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் டீம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் பிம்பிலிக்கி பிலாப்பி வெளியானது.
அந்த பாடலில் நடிகர் சிவகார்த்திகேயனின் பெயர் சரியாக இடம்பெறவில்லை என்றும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு என்றும் ரசிகர்கள் சுட்டிக் காட்டி உள்ளனர்.
இந்நிலையில், உடனடியாக பிழையை படக்குழுவினர் சரி செய்துள்ளனர்.

பிம்பிலிக்கி பிலாப்பி
இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், மரியா ரியாபோஷப்கா மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவாகி வரும் பிரின்ஸ் திரைப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் தற்போது வெளியாகி உள்ளது. தமன் இசையில் அனிருத் இந்த பாடலை பாடி உள்ளார்.

ஜலபுல ஜங் மாதிரியே இருக்கே
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துக்கு தமன் இசையமைத்திருந்தாலும், அனிருத் பாடிய நிலையில், அப்படியே ஆரம்பத்தில் டான் படத்தின் ஜலபுல ஜங் பாடல் வைப்ரேஷனே வருதே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். இந்நிலையில், லிரிக் வீடியோவில் இன்னொரு மிஸ்டேக்கையும் ரசிகர்கள் கண்டு பிடித்து சுட்டிக் காட்டி உள்ளனர்.

ஹீரோ பெயரிலேயே மிஸ்டேக்
அந்த லிரிக் வீடியோவில் SIVAKARTHKEYAN என்பதற்கு பதில் SIVAKATHKEYAN என R எழுத்து மிஸ் ஆகி உள்ளது. அதை சுட்டிக் காட்டியுள்ள ரசிகர்கள் படக்குழுவினர் ஹீரோவின் பெயர் ஸ்பெல்லிங் கூட பார்க்க மாட்டார்களா என கேள்வி எழுப்பி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.

சந்தோஷ் நாராயணனுக்கும் இதே பிரச்சனை
முன்னதாக சந்தானத்தின் குலுகுலு படத்திலும் சந்தோஷ் நாராயணன் என்பதற்கு பதிலாக சந்தோஷ் நாயணன் என எழுத்துப் பிழை இருந்தது. அதை பார்த்து கடுப்பான அவர், ஆம் நான் நன்றி உள்ள நாய் தான் என ட்வீட் போட உடனடியாக படக்குழுவினர் அதை திருத்தம் செய்தனர். பின்னர் அந்த ட்வீட்டையும் அவர் டெலிட் செய்து விட்டார்.

சொன்ன டைமுக்கு
இதுபோன்ற பிரச்சனைகள் வர காரணமே சொன்ன டைமுக்கு ரசிகர்களுக்காக ரிலீஸ் செய்து விட வேண்டும் என கடைசி நேரம் வரை அதற்காக உழைப்பது தான் என்கின்றனர். ஒரு முறை அனைத்தையும் சரி பார்த்து விட்டு ஓகே ஆன பின்னர் ரிலீஸ் தேதியை அறிவித்து வெளியிட்டால் இதுபோன்ற பிழைகளை தவிர்க்கலாம் என்கின்றனர்.

உக்ரைன் நடிகை டான்ஸ்
சிவகார்த்திகேயன் பிரம்மாதமாக நடனமாடுவார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று தான். அவருக்கு இணையாக உக்ரைன் நாட்டு நடிகை மரியாவும் பக்காவாக டான்ஸ் ஆடியுள்ளார். மேலும், விவேக்கின் வரிகளில் பாடல் ரசிகர்களை உடனடியாக கேட்ச் செய்யும் விதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சரி பண்ணிட்டாங்க
சிவகார்த்திகேயன் நடித்து தமன் இசையமைத்து அனிருத் பாடிய பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே பல லட்சம் வியூஸ்களை குவித்த நிலையில், சிவகார்த்திகேயனின் பெயரிலேயே பிழை இருப்பதை அறிந்த படக்குழுவினர் அதிரடியாக அதனை சரி செய்துள்ளனர். வியூஸை விட மிஸ்டேக் இருக்கக் கூடாது என நினைத்த ப்ரின்ஸ் படக்குழுவினரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications