Madharaasi Box office: மதராஸி படத்தின் 2ம் நாள் வசூல்.. எத்தனை கோடி தெரியுமா?
சென்னை: சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. மதராஸி படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 12 .8 கோடி வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கும் நிலையில், படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த தகவலை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில், அதில், எப்படியாவது துப்பாக்கி கலாச்சாரத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக படத்தின் வில்லனான வித்யுத் ஜம்வால் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து. ஆறு கண்டெய்னர்கள் நிறைய துப்பாக்கிகளை சென்னைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த துப்பாக்கிகளை எப்படியாவது தமிழகம் முழுவதும் சப்ளை செய்து ஆக வேண்டும் என்பதற்காக நார்த் இந்தியாவில் இருந்து ஆறு கண்டெய்னர்கள் சென்னைக்குள் வருகின்றன.

மதராஸி : தேசிய பாதுகாப்பு படைகளை சேர்ந்த பிஜுமேனன் தடுத்து நிறுத்துவதற்காக, களத்தில் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் பிஜூ மேனனின் டீமுக்கு அந்த கண்டெய்னர்கள் எங்கே போனது என்றே தெரியாமல் போய்விடுகிறது. இதனால், ரகசியமாக ஒரு குழுவை அமைந்து, காணாமல் போன கண்டெய்னர்களை கண்டுபிடித்து அழித்து, அந்த துப்பாக்கிகள் தமிழகத்திற்குள் சப்ளை ஆகாமல் அழிக்க வேண்டும் என்பதற்காக பிஜுமேனன் படாத பாடுபடுகிறார். இந்த ஆபத்தான வேலையை செய்து முடிக்க சிவகார்த்திகேயனை களமிறக்கிறார் பிஜு மேனன். அதன் பின் என்ன ஆனது என்பது தான் மதராஸி படத்தின் கதை.
குவியும் பாராட்டு: மதராஸி படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருப்பதாக சிலர் இணையத்தில் கருத்து தெரிவித்து வரும் போதும், சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த கமர்ஷியல் படமாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர். இந்த படம் ஏ.ஆர். முருகதாசுக்கு நிச்சயம் கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள ருக்மிணி ஒப்புக்கு ஹீரோயினாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோலில் நடித்துள்ளார். அதே போல வித்யுத் ஜம்வால் மிரட்டி இருக்கிறார்.
இரண்டாம் நாள் வசூல்: மிகப்பெரிய எதிர்பார்க்கப்பட்ட மதராஸி திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் சுமார் 12 .8 கோடி வரை வசூலித்துள்ளதாக நேற்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியளவில் மதராஸி திரைப்படம் முதல் நாளில் 15 கோடியும் உலகளவில் இப்படம் 20 கோடி வரையிலும் முதல் நாளில் வசூலித்திருப்பதாக கூறப்படும் நிலையில், படத்தின் இரண்டாம் நாள் வசூல், 11.75 கோடியாக உள்ளது. படத்தின் மொத்த வசூல் ₹ 25.40 கோடியாக உள்ளது. இது முதல் நாள் வசூலை விட குறைவு தான் என்றாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சிவகார்த்திகேயனின் முந்தைய படமான அமரன் படத்தின் முதல் நாள் வசூல் அளவிற்கு மதராஸி படம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் போட்ட பணத்தையாவது எடுக்குமா என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications











