Madharaasi Day 1 Collection: சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படத்தின் முதல் நாள் வசூல்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மதராஸி' திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விமர்சகர்கள் சிலர் இரண்டாம் பாதி குறித்து அதிருப்தி தெரிவித்த போதிலும், படத்திற்கு பலதரப்பட்ட ரசிகர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. தற்போது மதராஸி படத்தின் முதல் நாள் வசூலை பார்க்கலாம்.
மதராஸி படம் திரைக்கு வருவதற்கு முன்பே ₹100 கோடி வசூலிக்கும் என்ற பேச்சு பரவலாக எழுந்தது. தயாரிப்பு நிறுவனம் படம் வெளியீட்டுக்கு முன்பே கணிசமான தொகையைப் பெற்றுவிட்டதாக செய்தி பரவியது. சிவகார்த்திகேயனின் நடித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், இந்த படத்திற்கான ஓடிடி உரிமை ₹40 கோடிக்கும், செயற்கைக்கோள் உரிமை ₹26 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் ஒடிடி உரிமை பிரைம் வீடியோ பெற்றுள்ளதால், படம் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு 'மதராஸி' பிரைம் வீடியோவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் மதராஸி: 'மதராஸி' முதல் நாளில் அனைத்து மொழிகளிலும் ₹13 கோடி வசூலித்துள்ளதாக சாக்னில்க் வெளியிட்டுள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன்னென்றால், சனிக்கிழமை முன் விற்பனையில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்தப் படம் தமிழ்நாட்டில் இரண்டாவது நாளுக்கான முன் விற்பனையில் ₹4 கோடிக்கு மேல் வசூலித்து வலுவான நிலையில் உள்ளது.
முதல் நாள் வசூல்: அதேசமயம், மதராஸி திரைப்படம் தமிழகத்தில் முதல் நாளில் 10 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 14ந் தேதி வெளியான ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ₹44.5 கோடி வசூலித்தது என்றும், உலக அளவில் 'கூலி' திரைப்படம் முதல் நாளில் ₹151 கோடி வசூலித்து அதிக வசூல் செய்த தமிழ்த் திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. 'மதராஸி' திரைப்படம் 'கூலி'யின் சாதனையை நெருங்க முடியாவிட்டாலும், 'மதராஸி' படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான 'அமரன்',முதல் நாளில் உலகம் முழுவதும் ₹35 கோடி வசூலித்தது. இது 2024 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படங்களில் நான்காவதாக அதிக வசூலை அள்ளி திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











