»   »  சன்னி லியோன் படமெல்லாம் இந்த டிரெய்லருக்கு முன்னால எம்மாத்திரம்?

சன்னி லியோன் படமெல்லாம் இந்த டிரெய்லருக்கு முன்னால எம்மாத்திரம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கடந்த வாரத்தில் வெளியான 6 எக்ஸ்(இந்தி) பட டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பையும், வரவேற்பையும் ஒருசேர பெற்றிருக்கிறது.

6 பெண்களைப் பற்றிய 6 வித்தியாசமான கதைகளை ஒன்றிணைத்து இந்தப் படத்தை பாலிவுட் இயக்குநர் சந்திரகாந்த் சிங் இயக்கியிருக்கிறார்.

6 எக்ஸ் படக்குழுவினர் நிறைய துணிச்சலான காட்சிகளை வைத்து தைரியமாக இந்த டிரெய்லரை வெளியிட்டு இருக்கின்றனர். சன்னி லியோன் படமெல்லாம் இதற்குப் பக்கத்திலேயே வர முடியாது என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது இந்த படத்தின் டிரெய்லர்.

6 எக்ஸ்

6 எக்ஸ்

பாலிவுட் இயக்குநர் சந்திரகாந்த் சிங் இயக்கத்தில் சந்தீப் சுக்லா தயாரித்திருக்கும் படம் தான் 6 எக்ஸ். பிக்பாஸ் புகழ் சோபியா ஹயாத், அஷ்மித் படேல், நேகா துபியா மற்றும் ரியா சேன் ஆகியோர் இப்படத்தில் முக்கியமான வேடங்களை ஏற்று நடித்திருக்கின்றனர்.

6 பெண்கள்

6 பெண்கள்

6 பெண்களை பற்றி 6 விதமான கதைகளை ஒன்றிணைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார் சந்திரகாந்த் சிங். டிரெய்லரில் நொடிக்கு நொடி சிகரெட் பிடிக்கும் பெண்களையும், படுக்கையறைக் காட்சிகளையும் அதிகம் காண முடிகின்றது. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது படத்தில் கதை என்ற ஒன்று இருக்குமா? என்பது தெரியவில்லை.

பெண்களைப் பற்றி

பெண்களைப் பற்றி

முழுக்க முழுக்க பெண்களின் ஆசைகள், கோபங்கள், காதல், ஏமாற்றம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகியவை டிரெய்லர் முழுவதும் அதிகம் இடம்பெற்றிருக்கின்றன.

புகைக்கும் காட்சிகள்

புகைக்கும் காட்சிகள்

டிரெய்லர் முழுதுமே பெண்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும், பாலுணர்வைத் தூண்டும் காட்சிகளையும் இயக்குநர் அதிகமாக வைத்திருக்கின்றார் என்று எதிர்ப்புகள் இந்த டிரெய்லருக்கு எழுந்துள்ளது.அதே நேரத்தில் மற்றொருபுறம் இயக்குநர் மிகத் தைரியமாக இந்தக் காட்சிகளை வைத்திருக்கிறார் என்று அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.

சென்சார் காட்சிகளையும்

சென்சார் காட்சிகளையும்

2 நிமிடங்கள் ஓடும் டிரெய்லரையே முழுதாக பார்க்க முடியவில்லை அந்த அளவிற்கு நொடிக்கு நொடி அந்த மாதிரிக் காட்சிகளால் நிறைந்து வழிகின்றது 6 எக்ஸ் டிரெய்லர்.இதில் கொடுமை என்னவென்றால் இந்த டிரெய்லர் வெளியாகும் முன் வெட்டிய காட்சிகளை இணைத்து ஒரு வீடியோவை யூடியூப்பில் வெளியிட்டு இருப்பது தான்.

சென்சார் குழு

சென்சார் குழு

ஏற்கனவே பாலிவுட்டில் கயா கூல் ஹைன் ஹம் 3 மற்றும் மஸ்தி ஜாதே போன்ற அந்த மாதிரியான படங்கள் இந்த ஆண்டில் வெளிவரவிருக்கின்றன.

அந்த லிஸ்டில் தற்போது இந்தப் படமும் சேர்ந்து கொண்டது. இந்த டிரெய்லரைப் பார்க்கும் போது யூ டியூப் தளத்தின் சென்சார் குழு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்ற கேள்விதான் மனதில் எழுகின்றது.

English summary
Six X Rare And Dare movie trailer is out and it’s a sleaze fest. The makers recently released a sleaze filled trailer of the adult film which is a visual treat for all the people out there. ‘Bigg Boss’ fame Sofia Hayat marks her Bollywood debut with this film and sizzles in her role opposite Ashmit Patel who also is an ex Bigg Boss contestant.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil