மீண்டும் இயக்குநர் ஆகும் முடிவில் எஸ்ஜே சூர்யா… கில்லர் ஹீரோவாகப் போவது யார்?

சென்னை: அஜித்குமார் நடித்த வாலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா.

வாலி, குஷி, நியூ போன்ற சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியுள்ள எஸ்ஜே சூர்யா, தற்போது பிஸியான நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில், மீண்டும் எஸ்ஜே சூர்யா படம் இயக்கவுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய முயற்சிகள்

புதிய முயற்சிகள்

1999ல் வெளியான 'வாலி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா, முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். அஜித், சிம்ரன், ஜோதிகா, விவேக் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்தது. தொடர்ந்து விஜய் நடிப்பில் குஷி படத்தை இயக்கி இன்னொரு ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தார். அடுத்து எஸ்ஜே சூர்யா இயக்கிய நியூ படத்தில், அவரே ஹீரோவாகவும் நடித்து இன்னும் வெரைட்டி காட்டினார். ஒவ்வொரு படத்திலும் புதிய முயற்சிகளுடன் களமிறங்கிய எஸ்ஜே சூர்யா, அதில் சக்சஸ் பண்ணியும் காட்டினார். இதனால், தமிழ்த் திரையுலகில் மிக முக்கியமான இயக்குநர்களின் பட்டியலில் எஸ்ஜே சூர்யாவின் பெயர் நிரந்தரமாக பதிந்துவிட்டது.

நடிப்பில் கவனம்

நடிப்பில் கவனம்

எஸ்ஜே சூர்யாவின் மிகப் பெரிய கனவே ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது தான். தான் இயக்கிய படங்கள் மூலம் ஹீரோவாக நடித்த எஸ்ஜே சூர்யாவுக்கு, அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால், ஷங்கர் இயக்கிய 'நண்பன்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' ஆகிய படங்கள், தரமான கம்பேக் கொடுத்தன. அதன்பின்னர் கோலிவுட், டோலிவுட் என இரண்டு பக்கமும் பிஸியான நடிகராக மிரட்டி வரும் எஸ்ஜே சூர்யா, ஹீரோ, வில்லன் என எல்லா கேரக்டர்களும் செட்டாகிவிட்டார்.

மீண்டும் இயக்குநர்

மீண்டும் இயக்குநர்

சிம்புவுடன் மாநாடு, சிவகார்த்திகேயனுட டான் படங்களில் நடித்த எஸ்ஜே சூர்யா, தற்போது ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகும் 'RC 15' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அதேபோல், விஜய்யின் வாரிசு படத்திலும் லீடிங் ரோலில் நடித்து வருகிறார். இவைதவிர மேலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ள எஸ்ஜே சூர்யா, மீண்டும் படம் இயக்கும் முடிவுக்கு வந்துவிட்டராம். கடைசியாக எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் 'இசை' திரைப்படம் 2015ம் ஆண்டு வெளியாகியிருந்தது. இந்நிலையில், அவர் இயக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்ஜே சூர்யாவின் கில்லர்

எஸ்ஜே சூர்யாவின் கில்லர்

எஸ்ஜே சூர்யா இயக்கவுள்ள புதிய படத்திற்கு 'கில்லர்' என தலைப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இது கார் ரேஸை பின்னனியாக வைத்து உருவாகவுள்ளதாகவும், இதற்காக வெளிநாட்டில் இருந்து சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்யவுள்ளதாகவும் செய்திகள் வந்தவன்ணம் உள்ளன. இந்தப் படத்திற்கான திரைக்கதையை வேகமாக எழுதி வரும் எஸ்ஜே சூர்யா, விரைவில் அபிஸியலாக சில அப்டேட்களை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் ரேஸ் பற்றிய படம் என்பதால் ரசிகர்கள் அனைவரும் அஜித் இந்தப் படத்தில் நடிக்கலாம் என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், படத்தை இயக்குவதோடு எஸ்ஜே சூர்யாவே ஹீரோவாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X