»   »  குஷி 2-ம் பாகம்.. எஸ்ஜே சூர்யா ரெடி.. விஜய்?

குஷி 2-ம் பாகம்.. எஸ்ஜே சூர்யா ரெடி.. விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யும் எஸ் ஜே சூர்யாவும் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா நடித்து 2000-ம் ஆண்டில் வெளியான படம் குஷி. பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

அதன் பிறகு விஜய்யுடம் எஸ்ஜே சூர்யாவும் இன்னொரு படத்தில் இணையவிருந்தனர். அந்தப் படத்தின் தலைப்பு புலி. ஆல்பட் தியேட்டரில் வைத்து தலைப்பு அறிவிக்கப்பட்டு, பட வேலைகள் நடந்து வந்த நிலையில், திடீரென படம் நிறுத்தப்பட்டதாக அறிவித்தார்கள்.

அதே வேகத்தோடு தெலுங்குக்குப் போன எஸ்ஜே சூர்யா, பவன் கல்யானை வைத்து கொமரம் புலி என்ற படத்தை எடுத்தார். பின்னர் புலி என்ற தலைப்பிலேயே தெலுங்கில் ரிலீஸ் செய்தார்.

விட்டுக் கொடுத்தார்

விட்டுக் கொடுத்தார்

அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து விஜய் கேட்டதற்காக தமிழில் புலி தலைப்பை விட்டுக் கொடுத்தார். அதுதான் இப்போது சிம்பு தேவன் இயக்கத்தில் வெளியாகும் படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

குஷி 2

குஷி 2

தற்போது குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. 2-ம் பாகத்துக்கான கதை, திரைக்கதையை எஸ்.ஜே. சூர்யா உருவாக்கியுள்ளாராம்.

விஜய் சம்மதம்?

விஜய் சம்மதம்?

விஜய்யிடமும் அந்த கதையை சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. விஜய்யிடம் இருந்து சம்மதம் கிடைத்ததும் பட வேளைகளை துவங்க திட்டமிட்டு உள்ளார்.

சிம்பு தேவன் படம் முடிந்ததும்

சிம்பு தேவன் படம் முடிந்ததும்

விஜய் தற்போது ‘புலி' படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. ‘குஷி' 2-ம் பாகத்தில் நடிப்பது குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் 60

விஜய் 60

இந்த படத்தை விஜய் ஒப்புக் கொண்டால், இது அவரது 60 -வது படமாக அமையும். படத்துக்கு கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வில் எஸ்.ஜே. சூர்யா தீவிரமாக உள்ளார்.

English summary
SJ Surya is all set to make a sequel to his mega hit Kushi with Vijay in the lead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil