»   »  தெலுங்கில் குஷி 2 ம் பாகத்தை ஆரம்பித்தார் எஸ் ஜே சூர்யா,.. தமிழில் விஜய் ஹீரோ!

தெலுங்கில் குஷி 2 ம் பாகத்தை ஆரம்பித்தார் எஸ் ஜே சூர்யா,.. தமிழில் விஜய் ஹீரோ!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்திருக்கிறார் இயக்குநர் எஸ் ஜே சூர்யா, ஆனால் தமிழில் அல்ல, தெலுங்கில்.

தெலுங்கில் குஷி முதல் பாகத்தில் நடித்த பவன் கல்யாண்தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்.

படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டதை அறிவித்துள்ள சூர்யா, முதல் கட்டமாக இசையமைப்பு பணிகள் முடிந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SJ Surya starts Kushi 2 in Telugu

இதை உறுதிப்படுத்தும் வகையில், 'எஸ்ஜே சூர்யா மற்றும் அனூப்புடன் இணைவதில் மகிழ்ச்சி' என்று படத்தின் பாடலாசிரியர் ராமஜோகையா குறிப்பிட்டுள்ளார்.

பவன் கல்யாண் இப்போது சர்தார் கப்பார் சிங் படத்தில் நடித்து வருகிறார்.

குஷி 2-ம் பாகத்தை தமிழில் விஜய்யை வைத்து இயக்கவிருக்கிறார் எஸ்ஜே சூர்யா. ஏற்கெனவே இதற்கான சம்மதத்தையும் தெரிவித்துள்ளாராம் விஜய். அவரது 61 வது படமாக குஷி 2 வெளியாகும் எனத் தெரிகிறது.

English summary
SJ Suryah, who was supposed to direct Kushi 2 with Vijay has now commenced the pre-production work of the sequel in Telugu with Pawan Kalyan.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil