For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  உயர்ந்த மனிதன்.. பிக்.பி.யுடன் நடிப்பது மிகப்பெரிய வரம்.. எஸ்.ஜே.சூர்யா ஹேப்பி!

  |
  முதல்முறையாக.. தமிழ்ப்படத்தில் நடிக்கும் அமிதாப்.. ஹீரோ எஸ்.ஜே.சூர்யா!

  சென்னை: உயர்ந்த மனிதன் படத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்புடன் இணைந்து அடிப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

  பாலிவுட் சூப்பர்ஸ்டாரான அமிதாப்பச்சன் முதன்முறையாக நேரடித் தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு உயர்ந்த மனிதன் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

  திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் என்ற படநிறுவனத்தின் சார்பில் சுரேஷ் கண்ணன் மற்றும் பைவ் எலிமெண்ட் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். தமிழ் , ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் உருவாகிறது.

  பெரிய வரம்:

  பெரிய வரம்:

  இப்பட அறிவிப்பை வீடியோ வாயிலாக நடிகர் ரஜினி அறிவித்தார். இந்த விழாவில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, "ஒரு துணை இயக்குனராக திரை உலகில் கால் பதித்த காலத்தில் இருந்தே எனக்கு அமிதாப் சார் மீது அளவில்லாத பிரியம். அவருடன் இணைந்து நடிப்பது தான் எனக்கு கிடைத்த மிக பெரிய வரம்.

  உயர்ந்த மனிதன்:

  உயர்ந்த மனிதன்:

  எத்தனையோ தருணங்களில் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த சந்திப்பு எனக்கு மிகவும் ஸ்பெஷல். டிவிட்டரில் என் அடுத்த படத்தை பற்றிய பிரமாண்ட அறிவிப்பு இருக்கும் என பதிவிட்டதற்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ். நான் அடுத்து நடிக்கும் படம் உயர்ந்த மனிதன். தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது.

  இந்தியில் அறிமுகம்:

  இந்தியில் அறிமுகம்:

  இந்தியன் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சார் முதன்முறையாக இந்த தமிழ் படத்தில் நடிக்கிறார். நான் இந்தியில் நடிகனாக அறிமுகம் ஆகிறேன். இயக்குனர் கொண்டு வந்த கதை தான் அமிதாப் சார் வரைக்கும் இந்த படத்தை கொண்டு சென்றிருக்கிறது.

  சம்மதம்:

  சம்மதம்:

  2 வருடங்களுக்கு மேலாக இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வருகிறது. திரைக்கதை மட்டும் ஒரு வருடம் எழுதியிருக்கிறார். ஸ்கிரிப்டை அமிதாப் பச்சன் சாரிடம் கொண்டு சென்று கொடுத்தோம். எல்லாம் படித்து முடித்த பிறகு அவரை இறுதியாக ஒரு முறை சந்தித்தோம். கதை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது, சில சந்தேகங்கள் இருக்கின்றன, அவற்றை விளக்க வேண்டும் என்றார். அதை கேட்ட பிறகு கண்டிப்பாக நான் நடிக்கிறேன் என்றார்.

  பெரிய சாதனை:

  பெரிய சாதனை:

  அதை யார் அறிவிக்க முடியும் என்றால் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் தான் முடியும். அவரும் உடனடியாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே அழைத்து எங்களை வாழ்த்தி பட அறிவிப்பை வெளியிட்டார். நான் ஏதோ சாதனை செய்து விட்டது போல பேசுவதாக நினைக்க வேண்டாம். இந்த படத்தை ஒருங்கிணைத்ததே எனக்கு ஒரு பெரிய சாதனை தான்.

  இன்ஸ்பிரேஷன்:

  இன்ஸ்பிரேஷன்:

  அமிதாப் பச்சன் சாரின் 2019 காலண்டர் காட்டும்போது நானே வியந்து போனேன், 5 நாட்கள் கூட எங்கள் படத்துக்கு அதிகமாக ஒதுக்க முடியாது என்ற நிலையில் மிகவும் பிஸியாக இருந்தார். 2019ல் மட்டும் 6 படம், கோன் பனேகா க்ரோர்பதி, விளம்பரங்கள் என இந்த வயதிலும் அவ்வளவு பிஸியாக இருக்கிறார். அவர் நமக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

  நன்றி:

  நன்றி:

  இந்த படத்துக்கு மிக பொருத்தமான தலைப்பு நடிகர் திலகம் சிவாஜி சார் அவர்களின் உயர்ந்த மனிதன். இந்த தலைப்பை ஏவிஎம்மிடம் இருந்து வாங்கியிருக்கிறோம். இந்த படத்துக்கு மிகப்பெரிய ஆதரவை கொடுத்த ஏஆர் முருகதாஸ் அவர்களுக்கும் நன்றி. கஷ்டத்தில் இருக்கும்போது இயக்குனர் சொன்ன வார்த்தைகளே தெம்பை கொடுத்தது. இந்த படம் இந்தியா முழுக்க மட்டுமின்றி சீனா வரை போகும். கதை அப்படி அமைந்திருக்கிறது" என இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பேசினார்.

  English summary
  Actor-filmmaker SJ Surya, who’s currently enjoying the second innings of his career, has scored something of a coup by getting superstar Amitabh Bachchan to give his nod to a Tamil film for the very first time in his distinguished acting career. The film titled Uyarndha Manidhan (The Tall Man) will be made in Tamil and Hindi by director Tamizhvaanan.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more