Don't Miss!
- News
மதுரை எய்ம்ஸ் விவகாரம்.. மாணவர்களால் பார்க்க முடியாத ஒரே கல்லூரி.. கொதிக்கும் சு.வெங்கடேசன்!
- Lifestyle
மாவு பிசையும்போது இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணா... பந்துபோல மென்மையான சப்பாத்தி வருமாம்...!
- Technology
இந்தியாவில் கம்மி விலையில் 2 போன்களை இறக்கிவிடும் Motorola.! காத்திருப்போம்.!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Finance
ஊழியர்களை ஏன் பணி நீக்கம் செய்றீங்க..அப்படி செய்யாதீங்க.. அஷ்னீர் குரோவரின் பரிந்துரைய பாருங்க!
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
நான் பார்த்த அற்புதமான உள்ளம்... ராகவா லாரன்ஸ் பற்றி எஸ்.ஜே.சூர்யாவின் தெறி பதிவு!
சென்னை : ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ் படம் குறித்த சூப்பரான தகவலை எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ளார்.
2014ம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்திரைப்படம், பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத்தந்தது.
அந்த பக்கம் எஸ்.ஜே சூர்யா.. இந்த பக்கம் ராகவா லாரன்ஸ்.. மிரட்டலாக வெளியானது ஜிகர்தண்டா 2 டீசர்!

கார்த்திக் சுப்புராஜ்
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தையும் விமர்சகர்களின் பெரும் மதிப்பையும் வைத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கிய குறும்படங்கள், திரைப்படங்கள் அனைத்தும் மக்களை கவரும் வகையில் இருந்தன. குறும்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் பீட்சா திரைப்படத்தை மிகக் குறைந்த பொருட்செலவில் உருவாக்கினார். இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் திரை வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

ஜிகர்தண்டா
பீட்சா திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, ஜிகர்தண்டா என்ற பெயரில் ஒரு வித்தியாசமான கதையை கையில் எடுத்தார். அதாவது, ஒரு தாதாவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க நினைக்கும் இயக்குநர் சித்தார்த், சுவாரஸ்யமான கதையைத் தேடி அலைகிறார். கடைசியில் மதுரையில் ஒரு தாதாவை சந்திக்கிறார். கொடூரமான கொலையை செய்யும் பாபி சின்ஹா கடைசியில் காமெடியனாக மாறிவிடுகிறார். நகைக்சுவையான இந்த திரைப்படத்திற்கு மக்களிடம் பெரும் ஆதரவு கிடைத்தது.

எஸ்.கே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ்
இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளான நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜிகர்தண்டா டபுள் X ல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எஸ்.கே.சூர்யா, ராகவா லாரன்ஸ் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் கதாபாத்திரத்தில் பான் இந்தியா ஸ்டார் ஒருவர் கமிட்டாகி உள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ் டீசர்
ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ் திரைப்படத்தின் சமீபத்தில் வெளியானது. அந்த டீசரில், ஷூட் கோட் போட்டுக்கொண்டு இருக்கும் எஸ்.ஜே சூர்யா என்ட்ரி கொடுக்க, இரும்பு பட்டறையில் வேலை செய்து கொண்டிருக்கும் ராகவா லாரன்சை பரட்டை தலை, மூக்குத்தியுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்தார். இந்த டீசர் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

நான் பார்த்த அற்புதமான உள்ளம்
இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ் படபிடிப்பு தளத்தில் ராகவா லாரன்சுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்து, 36 நாட்கள் ஒரே கட்ட படப்பிடிப்பு. என்ன ஒரு அற்புதமான படப்பிடிப்பு, கான்செப்ட், செட், எவ்வளவு பெரிய செலவு, சிறந்த ஒளிப்பதிவு, மிகச் சிறந்த தயாரிப்பு மதிப்பு. இந்த வாய்ப்புக்கு மிக்க நன்றி கார்த்திக் சுப்புராஜ். நான் பார்த்த அற்புதமான உள்ளம் நடிகர் ராகவா லாரன்ஸ் என பகிர்ந்துள்ளார்.