»   »  குஷி-2... கால்ஷீட் இல்லை... விஜய்க்குப் பதில் ‘பவர் ஸ்டாரை’ இயக்கும் எஸ்.ஜே.சூர்யா

குஷி-2... கால்ஷீட் இல்லை... விஜய்க்குப் பதில் ‘பவர் ஸ்டாரை’ இயக்கும் எஸ்.ஜே.சூர்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை தெலுங்கு "பவர் ஸ்டார்" பவன் கல்யாண் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழில் வெற்றிப்பட இயக்குநர்கள் வரிசையில் எஸ்.ஜே.சூர்யாவும் ஒருவர். இவர் ஆரம்பக் காலத்தில் அஜித், விஜய் இருவருக்கும் வெற்றிப்படங்களைக் கொடுத்தவர்.

இவரது இயக்கத்தில் 1999ல் வெளிவந்த வாலி திரைப்படம் அஜித்துக்கும், 2000-ல் வெளிவந்த படம் விஜய்க்கும் திருப்புமுனையாக அமைந்தது.

நியூ...

நியூ...

இந்தப் படங்களைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்கவில்லை. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்த நியூ படம் ஆரம்பத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால், விளம்பரத்தோடு அது நின்று போனது.

நடிகராகவும்...

நடிகராகவும்...

இயக்கத்திற்கு நடுவே படங்களில் நாயகன் மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இவர் தற்போது இறைவி படத்தில் நடித்துள்ளார்.

குஷி 2...

குஷி 2...

இந்நிலையில், குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளார் அவர். இதற்காக சமீபத்தில் விஜயை சந்தித்து அவர் கதையைக் கூறினார்.

கால்ஷீட் பிரச்சினை...

கால்ஷீட் பிரச்சினை...

ஆனால், தற்போது விஜய் கைவசம் தேதிகள் இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இப்போதைக்கு தமிழில் குஷி 2ம் பாகத்தை விஜயை நடிக்க வைத்து இயக்குவது சாத்தியமில்லை.

தெலுங்கில்...

தெலுங்கில்...

இதனால் குஷி 2ம் பாகத்தை முதலில் தெலுங்கில் எடுக்க எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்காக தெலுங்கு நடிகர் பவர்ஸ்டார் பவன்கல்யாணை சந்தித்து அவர் கதையைக் கூறியுள்ளார்.

பவன்...

பவன்...

தமிழைப் போலவே தெலுங்கிலும் குஷி படம் பெரும் வெற்றி பெற்றது. அதில் நடித்திருந்த பவன் கல்யாணுக்கு அப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

புலி...

புலி...

அதனைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கொமரம் புலி என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார் பவன். ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதில் என்ன ஆச்சரியம் என்றால் முதலில் விஜய்தான் இப்படத்தில் நடிப்பதாக இருந்தது. அது சரிவராததால் புலியை தெலுங்கில் கொமரம் புலியாக்கினார் சூர்யா.

விரைவில்...

விரைவில்...

இந்நிலையில், மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவிடம் பவன் கதை கேட்டுள்ளார். கதை பிடித்துப் போனதால் அவரும் நடிக்கச் சம்மதித்து விட்டார் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
It was earlier said that SJ Suryah might direct a sequel of his superhit love story Kushi released in 2000, with Vijay again in the lead role. But now that Vijay’s dates are full, we hear that SJ Suryah apparently has plans to make that script in Telugu with Powerstar Pawan Kalyan playing the protagonist.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil