Don't Miss!
- News
நாளை தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Automobiles
டொயோட்டா காரை அப்படியே காப்பி அடித்து புதிய காரை உருவாக்கும் மாருதி! பெரிய குடும்பங்களுக்காக சூப்பர் முயற்சி!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
எஸ்கே 20 படத்திற்கு இப்படி ஒரு அப்டேட்டா... செம த்ரில்லிங்கா இருக்கே
சென்னை : சிவகார்த்திகேயன் நடித்து வரும் எஸ்கே 20 படம் பற்றிய முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் அடுத்து என்ன அறிவிப்பு அல்லது அப்டேட்டை படக்குழு வெளியிட போகிறது என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனின் 20 வது படத்திற்கு எஸ்கே 20 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் முதல் பைலிங்குவல் படமான இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இயக்கப்பட்டு வருகிறது. சிவகார்த்திகேயன் தெலுங்கில் என்ட்ரியாகும் இந்த படத்தை டைரக்டர் அனுதீப் இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஃபிலிம்ஸ் பேனரில், சுரேஷ் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது.
அரங்கம்
அதிர
வரும்
அதீரா...கோப்ரா
செகண்ட்
சிங்கிள்
எப்போ
வருது
தெரியுமா?

எஸ்கே 20 ஷுட்டிங்
எஸ்கே 20 படத்தின் ஷுட்டிங் பிப்ரவரி மாதம் காரைக்குடியில் சிறப்பு பூஜையுடன் துவங்கப்பட்டது. இதன் போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகை மரியா ரொபோஷாப்கா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், பிரேம்ஜி அமரன், நவீன் பாலிஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

யாருக்கு என்ன ரோல்
இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தமிழ் மற்றும் தெலுங்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியராகவும், மரியா ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் ஆசிரிகையாகவும் நடிக்கிறார்கள். ரொமான்டிக் காமெடி படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் பிரேம்ஜி வில்லன் ரோலில் நடிப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

செம அப்டேட்டா இருக்கே
லேட்டஸ்ட் தகவலின் படி, எஸ்கே 20 படத்தில் ஒரு பாடல் மட்டும் தான் மீதம் உள்ளதாம். மற்ற அனைத்து பகுதிகளையும் படமாக்கி முடித்து விட்டார்களாம். படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கையும் இந்த மாத இறுதிக்குள் முடித்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தை முடித்த பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
Recommended Video

அடுத்த அப்டேட் எப்போ
சிவகார்த்திகேயனின் டான், அயலான், எஸ்கே 20 என வரிசையாக 3 படங்கள் இந்த ஆண்டில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. டான் படம் மே 13 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அயலான் படம் டிசம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதனால் விரைவில் எஸ்கே 20 டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.