»   »  பொங்கல் ரேஸில் பல படங்கள்... 'ஸ்கெட்ச்' ரிலீஸ் தள்ளிப்போகுமா?

பொங்கல் ரேஸில் பல படங்கள்... 'ஸ்கெட்ச்' ரிலீஸ் தள்ளிப்போகுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
பொங்கல் ரேஸில் வர குவிந்திருக்கும் படங்கள்.. ஸ்கெட்ச் வருமா ?- வீடியோ

சென்னை : தொடங்கியிருக்கும் 2018-ம் ஆண்டில் வரும் முதல் வெள்ளிக்கிழமையான ஜனவரி 5-ம் தேதி 'விதி மதி உல்டா' என்ற ஒரு படம் மட்டுமே வெளியாக உள்ளதாக தற்போது வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், பொங்கலை முன்னிட்டு பல படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில முன்னணி நடிகர்களின் படங்களும் இருக்கின்றன.

கடந்த சில வருடங்களாகவே பண்டிகை நாட்களில் ஐந்துக்கும் குறைவான படங்களே வெளிவருவது வழக்கமாக இருந்தது. இந்த வருடம் தான் அந்த லிஸ்ட் அதிகமாகியிருக்கிறது.

பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

வரும் பொங்கலுக்கு, 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்', 'குலேபகாவலி', 'கலகலப்பு 2', 'மதுர வீரன்', 'மன்னர் வகையறா', 'நிமிர்', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'ஸ்கெட்ச்', 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய 9 படங்கள் ரிலீஸ் ஆகயிருப்பதாக கூறப்படுகிறது.

ஜனவரி ரிலீஸ்

ஜனவரி ரிலீஸ்

இது தவிர ஜனவரி வெளியீடு என 'இரும்புத்திரை, டிக் டிக் டிக்' ஆகிய படங்களும் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் எந்தப் படம் பொங்கலுக்கு வெளிவரும், எது ஜனவரி வெளியீடாக அல்லது பிப்ரவரி வெளியீடாக மாறும் என்பது கடைசி நேரத்தில்தான் தெரிய வரும்.

ஒரே நாளில் இத்தனை படங்களா?

ஒரே நாளில் இத்தனை படங்களா?

பொங்கல் அன்று ஒரேநாளில் இத்தனை படங்கள் வெளியாவது சாத்தியமில்லை. தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை ஏற்படும் என்பதால், கடைசி நேரத்தில் சில படங்கள் பின்வாங்கி விடும் என்றே தெரிகிறது.

ஸ்கெட்ச் படம் விலகல்?

ஸ்கெட்ச் படம் விலகல்?

இந்த நிலையில், விக்ரமின் 'ஸ்கெட்ச்' படம் இன்னும் சென்சார் செய்யப்படவில்லை. அதனால் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் ஸ்கெட்ச் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கி விடும் என்று தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரலாம்.

ஜனவரி 26 ரிலீஸ்?

ஜனவரி 26 ரிலீஸ்?

'ஸ்கெட்ச்' படத்தின் தெலுங்கு பதிப்பு ஜனவரி 26-ம் தேதி வெளியாகிறது. அதனால் ஒருவேளை பொங்கலுக்கு ஸ்கெட்ச் திரைக்கு வராதபட்சத்தில், ஜனவரி 26-ம் தேதியே தமிழிலும் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

English summary
It has been announced that many films will be released on Pongal. This year there are 9 movies in the pongal release list. If the delay in getting censor certificate, 'Sketch' movie may out from Pongal race.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X