»   »  சினிமா டிக்கெட் விலை விர்ர்ர்... மல்டிப்ளெக்ஸ்களில் ரூ 222... விளங்கிரும் சினிமா!

சினிமா டிக்கெட் விலை விர்ர்ர்... மல்டிப்ளெக்ஸ்களில் ரூ 222... விளங்கிரும் சினிமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி தியேட்டர்களுக்குப் போய்தான் சினிமா பார்க்க வேண்டுமா என யோசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர் மக்கள். காரணம், வரலாறு காணாத டிக்கெட் விலை உயர்வு.

ஒரு தனி நபர் சினிமா பார்க்க குறைந்தபட்சம் ரூ 500 வது தேவை எனும் அளவுக்கு டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Sky high price hike in Cinema tickets

குறிப்பாக மல்டிப்ளெக்ஸ்களில் படம் பார்ப்பது மிகக் காஸ்ட்லி பொழுதுபோக்காகிவிட்டது. நடுத்தரக் குடும்பத்தினர் குடும்பத்தோடு படம் பார்ப்பது, ஒரு பொழுதுபோக்குப் பூங்காவுக்குப் போவதை விட காஸ்ட்லியாகிவிட்டது.

இன்றிலிருந்து தியேட்டர்களில் வசூலிக்கப்படவிருக்கும் டிக்கெட் விலை இதோ:

ஒன்று அல்லது இரண்டு திரை கொண்ட அரங்குகளுக்கு:

ரூ 120 ஆக இருந்த டிக்கெட் விலை ரூ 150 ஆகவும்,
ரூ 95 ஆக இருந்தது ரூ 118. 80 ஆகவும்,
ரூ 85 ஆக இருந்தது ரூ 106.30 ஆகவும்.
ரூ 10 டிக்கெட் ரூ 15 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவற்றுடன் ஜிஎஸ்டி 18 சதவீதம், உள்ளூர் வரி 10 சதவீதம் வசூலிக்கப்படும். தமிழ் மொழியல்லாத படங்களுக்கு 20 சதவீதம் கேளிக்கை வரி.

மல்டிப்ளெக்ஸ் மால்களில்...

ரூ 150 ஆக இருந்த டிக்கெட் ரூ 207 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஜிஎஸ்டி 28 சதவீதம், கேளிக்கை வரி 10 சதவீதம் அடங்கும். அதுவே தமிழ் மொழியல்லாத படம் என்றால் கேளிக்கை வரி 20 சதவீதம் சேர்த்து ரூ 222. ஆன்லைன் பதிவுக் கட்டணம் தனி.

ஒரே மாதத்தில் டிக்கெட் விலை ரூ 102 அதிகரித்துள்ளது மால்களில். சாதாரண அரங்குகளில் ரூ 70 வரை அதிகரித்துள்ளது. அதாவது அரசாங்கம் வரியாக விதித்ததற்கும் மேலேயே டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளனர் திரையரங்க உரிமையாளர்கள். ஆனால் இது கட்டுப்படியாகாது என்று புலம்பி வருகின்றனர் தியேட்டர்காரர்கள்.

அரசாங்கத்துக்கும் வருமானம், தியேட்டர்காரர்களுக்கும் லாபம். இடையில் நசுங்குபவர்கள் படம் பார்க்க வரும் பாவப்பட்ட ரசிகர்கள். விளங்கிரும் சினிமா!

English summary
The ticket prices in cinema theaters hiked heavily from today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil