உறங்கும் போட்டியாளர்கள்..பிக்பாஸ் அனுப்பி வைத்த பிரியாணி அறுசுவை விருந்து..ஒளித்து வைத்த அமுது டீம்

பிக் பாஸ் வீட்டில் மதியம் ஒரு மணி வரை போட்டியாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.
பிக் பாஸ் போட்டியாளர்களுக்காக இன்று அவர் அனுப்பி வைத்த பிரியாணி உள்ளிட்ட அறுசுவை விருந்து பற்றி கூட தெரியாமல் உறங்கிக் கொண்டிருந்தனர்.
பிரியாணி உள்ளிட்டவைகளை எடுத்து அமுதவாணன் ரச்சிதா ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்டோர் ஒளித்து வைத்துள்ளனர்.

 பிரியாணி வந்தது கூட தெரியாமல் உறங்கிய ஹவுஸ்மேட்ஸ்

பிரியாணி வந்தது கூட தெரியாமல் உறங்கிய ஹவுஸ்மேட்ஸ்

பிக்பாஸ் வீட்டில் பகலில் தூங்குவது மோசமான செயல் என்று கமல்ஹாசன் ஏற்கனவே எச்சரித்து இருந்தார். டாஸ்க் செய்வது, வேலை பற்றி கவலைப்படாமல் தூங்குகிறீர்கள் என்று எச்சரித்து இருந்தார். வாரம் ஒரு முறை கமல்ஹாசன் வரும் நாளன்று எந்தவித போட்டியும் இல்லாமல் உறங்க அனுமதிப்பார்கள். ஆனால் கிடைத்தது தான் சாக்கு என்று மதியம் 2 மணி வரை அனைவரும் உறங்கினர். இதில் காமெடியான விஷயம் என்னவென்றால் இவர்களுக்காக மதிய விருந்தாக பிரியாணி, சிக்கன், இனிப்பு உள்ளிட்ட அறுசுவை விருந்தை பிக் பாஸ் அனுப்பி வைத்து இருந்தார். அது பற்றி தெரியாமலேயே எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.

 மதிய உணவாக பிக்பாஸ் அனுப்பிய பிரியாணி, சிக்கன் துள்ளி குதித்த ரச்சிதா

மதிய உணவாக பிக்பாஸ் அனுப்பிய பிரியாணி, சிக்கன் துள்ளி குதித்த ரச்சிதா

காலையிலேயே எழுந்துவிட்ட அமுதவாணன், ரச்சிதா, ராபர்ட் மாஸ்டர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் காலை உணவை தயாரித்து விட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்டோர் ரூம் பெல் அடிக்க பேட்டரி மாற்ற கூப்பிடுகிறார்கள் என்று நினைத்து ரச்சிதா உள்ளே சென்று பார்த்தார். அங்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வரிசையாக பிரியாணி, சிக்கன் 65, ரசகுல்லா என அறுசுவை இருந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து ரச்சிதா குதித்து சந்தோஷப்பட்டார். உடனடியாக வெளியே ஓடிவந்து மாஸ்டரையும், அமுதவாணனையும் சத்தம் போட்டு அழைத்தார். அவர்கள் என்னவோ ஏதோ என்று பதறி அடித்து உள்ளே ஓடி வந்தனர். உள்ளே வந்து பார்த்த அவர்களுக்கும் அதிர்ச்சி கலந்த சந்தோஷம். உடனடியாக மூவரும் சேர்ந்து திட்டம் போட்டு இதை எடுத்து ஒளித்து வைத்தனர்.

 அமுதவாணன் ஒளித்து வைத்த பிரியாணி

அமுதவாணன் ஒளித்து வைத்த பிரியாணி

உடனடியாக சமையல் கபோர்ட்டில் அனைத்தையும் ஒளித்து வைத்தனர். அப்போது கண்விழித்த ராம்குமார் இதைப்பற்றி அறியாமல் தூக்க கலக்கத்தில் அமர்ந்திருந்தார். மற்றொரு போட்டியாளர் கதிரவன் சமையலறை பக்கம் வந்த பொழுது அவசர அவசரமாக ஒளித்து வைத்தனர் மூவரும். ஏன் ஸ்டோர் ரூமின் பெல் அடித்தது என்று கதிரவன் கேட்க பேட்டரி மாத்த என்று அவரை உள்ளே அனுப்பி வைத்தனர். அவருடன் உள்ளே சென்ற ரச்சிதா அவரிடம் ஆர்வம் மிகுதியில் பிரியாணி வந்த விஷயத்தை சொல்லி, யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். கதிரவன் அதற்கு ஜாலியாக ஒப்புக்கொண்டு கேமராவை பார்த்து நேற்று எல்லாம் அமுது அழுது கொண்டிருந்தார் இன்று சந்தோஷமாக இருக்கிறார் என்று கையை உயர்த்தி காட்டினார்.

 சஸ்பென்ஸுக்குள் சஸ்பென்ஸ் வைத்த மைனா, அசீம், மணி டீம்

சஸ்பென்ஸுக்குள் சஸ்பென்ஸ் வைத்த மைனா, அசீம், மணி டீம்

நான்கு பேருக்கு மட்டுமே இந்த உண்மை தெரிந்த நிலையில் அவர்கள் சென்றுவிட, கொஞ்ச நேரம் பொறுத்து அங்கு வந்த மைனா காபி பொடி எடுக்க கப்போர்டை திறந்த போது பிரியாணி உள்ளிட்டவற்றை பார்த்துவிட்டு அசீமை கூப்பிட்டு காண்பிக்க அசீம், மணிகண்டன் அதை பார்த்துவிட்டு இது அமுதவாணன் டீம் வேலையா? நாமும் தெரியாதது போல் இருந்து விடுவோம் என்று சொல்லி அவர்கள் தெரியாதது போல் நடந்து கொண்டார்கள். என்ன மணி, அமுதவாணன் என்ன மணி என்று சந்தோஷமாக அழைத்ததை வைத்து மணிகண்டன் அப்போதே எனக்கு சந்தேகமாக இருந்தது என்று சொல்லி கொண்டிருந்தார்.

 திருதிருவென விழித்த ராபர்ட் மாஸ்டர்

திருதிருவென விழித்த ராபர்ட் மாஸ்டர்

சஸ்பென்ஸை தெரிந்துகொண்ட மைனா, அசீம், மணிகண்டன் எதுவும் தெரியாதது போல் ராபர்ட் மாஸ்டரிடம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த மழைக்கு சிக்கன், பஜ்ஜி , போண்டா இருந்தால் நல்லா இருக்கும் இல்ல மாஸ்டர் என ராபர்ட்டை பார்த்து கேட்க அவர் திருதிருவென விழித்தார். ஆனால் இது எதையுமே அறியாத மற்றவர்கள் இரண்டு மணி வரை உறங்கிக் கொண்டிருந்ததை காண முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X