»   »  சிங்கம் வருது பராக் பராக்: எஸ்3யை பார்த்து ஒதுங்கிய படங்கள்

சிங்கம் வருது பராக் பராக்: எஸ்3யை பார்த்து ஒதுங்கிய படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ் 3 படம் ரிலீஸாவதையொட்டி கடுகு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடித்துள்ள எஸ் 3 படம் ஜனவரி 26ம் தேதி ரிலீஸாக உள்ளது. டிசம்பர் மாதம் வெளியாக வேண்டிய படம் தள்ளித் தள்ளிப் போய் குடியரசு தினத்தன்று வெளியாகிறது.


Small budget movies give way to S3

இந்நிலையில் ஜனவரி 26ம் தேதி ரிலீஸாகவிருந்த பரத் நடித்துள்ள கடுகு படம் தள்ளிப் போயுள்ளது. இது குறித்து கடுகு பட இயக்குனர் விஜய் மில்டன் கூறுகையில்,


என் முதல் படமான கோலி சோடா ஜனவரி 26ம் தேதி ரிலீஸானது. அதே போன்று குடியரசு தினத்தன்று கடுகு படத்தை ரிலீஸ் செய்ய நினைத்தேன். இந்நிலையில் எஸ்3 படம் ஜனவரி 26ம் தேதி வெளியாவதால் என் படத்தின் ரிலீஸை தள்ளி வைத்துள்ளேன்.


என் படம் எப்பொழுது ரிலீஸாகும் என 10 நாட்களில் அறிவிப்பு வெளியிடுவேன் என்றார்.


எஸ் 3 என்கிற ஜாம்பவானோடு மோத விரும்பாமல் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள மேலும் சில படங்களின் ரிலீஸும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

English summary
Kadugu and some other movies' release have got postponed as Suriya's S3 is hitting the screens on January 26th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil