காமெடி தமாக்கா...மீண்டும் இணையும் எஸ்எம்எஸ் கூட்டணி
சென்னை : தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத காமெடி, ரொமான்டிக் என்றால் அது 2009 ம் ஆண்டு வெளியான சிவா மனசுல சக்தி படம் தான். இந்த படத்தை ரசிகர்கள் சுருக்கமாக எஸ்எம்எஸ் என அழைத்தனர்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.ராஜேஷ் என்பவர் இயக்கி இருந்தார்.

ஜீவா, அனுயா லீட் ரோலில் நடிக்க, சந்தானம் ஹீரோவின் ஃபிரண்டாக நடித்திருந்த படம். ஹிட்டானிந்த படம் இன்று வரை ரசிகர்களால் பேசப்படும் படமாக உள்ளது. இதில் குடித்து விட்டு ஜீவா சிரித்துக் கொண்டே பேசும், தெரியலியே மச்சி...ஒரு குவாட்டர் சொல்லேன் என்ற டயலாக் ரொம்ப பாப்புலர்.
எஸ்எம்எஸ் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற இரு பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தார் டைரக்டர் ராஜேஷ். ஆனால் இந்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. அதே சமயம் இந்த மூன்று படங்களிலும் சந்தானத்தின் காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது.
அதே போல் ராஜேஷ் இதுவரை இயக்கிய மூன்று படங்களிலுமே பாடல்கள் செம ஹிட் ஆகி உள்ளது. இதனால் இவர்கள் மீண்டும் இணையும் படத்திற்கு யார் இசையமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதற்கு பிறகு ஜீவா மற்றும் சந்தானத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் இயக்க ராஜேஷ் பலமுறை முயற்சித்தார். அதற்காக கதைகளையும் தயாரித்து வந்தார். லேட்டஸ்ட் தகவலின் படி, தற்போது மீண்டும் ஜீவா மற்றும் சந்தானத்தை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க ராஜேஷ் திட்டமிட்டுள்ளாராம். இந்த படம் பற்றிய ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
இந்த படத்தை இயக்க மூன்று டாப் தயாரிப்பு நிறுவனங்கள் நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனவாம். இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டால் ஜீவா - சந்தானம் - ராஜேஷ் இணையும் புதிய படம் பற்றிய அறிவிப்பு அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வெளியிடப்படுமாம்.


Click it and Unblock the Notifications











