»   »  மல்டிப்ளெக்ஸ்களில் அநியாய விலை! - மும்பை உயர் நீதி்மன்றம்

மல்டிப்ளெக்ஸ்களில் அநியாய விலை! - மும்பை உயர் நீதி்மன்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தியேட்டருக்குள் கூடிய சீக்ரம் சாப்பாடு கொண்டுட்டு போலாம்!

மும்பை: நாடு முழுவதும் உள்ள மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் உணவுப் பொருட்களை அநியாய விலைக்கு விற்கிறார்கள் என்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உணவுப் பொருட்கள் பல மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்லவும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த நிலையில் பார்வையாளர்கள் வெளியில் இருந்து தியேட்டருக்குள் உணவு பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Snacks price in multiplex very high, Mumbai SC

இந்த மனு மீதான விசாரணை நேற்று முன்தினம் நீதிபதிகள் சாந்தனு கேம்பர், மாக்ரந்த் கர்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ''தியேட்டரில் அநியாய விலைக்கு உணவுப்பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அதை வாங்க வேண்டும் என பார்வையாளர்களை கட்டாயப்படுத்த முடியாது. பார்வையாளர்களுக்கு உணவுப்பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கவில்லையென்றால் தியேட்டருக்குள் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்யவும் கூடாது. தியேட்டருக்குள் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால், பார்வையாளர்களையும் அதை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்,'' என்று கருத்து தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் 6 வாரத்திற்குள் கொள்கை முடிவை உருவாக்குவதாக மாநில அரசின் வக்கீல் கூறினார். எனவே நீதிபதிகள் மனு மீதான விசாரணையை ஜூன் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

English summary
The Mumbai High Court says that in all multiplexes snacks prices are very high and should be controlled.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X