»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார் விபத்தில் சிக்கிய ஸ்னேகாவுக்கு முதுகெலும்பிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

வலது காலில் 4 விரல்களிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

முதுகு எலும்பிலும் முறிவு ஏற்பட்டுள்ளதால் 2 மாதங்களுக்கு முழு பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் எனமருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார். 10 நாட்கள் அவர் தொடர்ந்து மருத்துவமனையிலேயே இருப்பார்என்று தெரிகிறது.

அதன் பிறகு வீட்டில் முழு ஓய்வில் இருப்பார்.

படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து காரில் இவர் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தபோது ரேணிகுண்டாஎன்ற இடத்தில் லாரியுடன் மோதி தொடர்ந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஸ்னேகா தவிர தாயார் பத்மாவதியும் டிரைவரும் காயமடைந்தனர். ஸ்னேகாவுக்குத் தான் பலத்த காயம்உண்டானது.

கார் விபத்தில் நடிகை ஸ்னேகா படுகாயம்

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil