»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீகாந்த்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஸ்நேகாவின் கனவு "பார்த்திபன் கனவு" மூலம் ஒரு வழியாகநனவாகிறது.

இருவரும் "பார்த்திபன் கனவு" என்ற புதிய படத்தில் இணைகிறார்கள். "மூன்றாம் பிறை" படத்தைத் தயாரித்த"சத்யஜோதி பிலிம்ஸ்" இந்தப் படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் பூஜை நேற்று நடந்தது. கலர்புல்லான டிரஸ்களில் ஸ்ரீகாந்த்தும் ஸ்னேகாவும் (இருவரும் ஒரேசிவப்பு கலரில்) பூஜையில் கலந்து கொண்டனர்.

பார்த்திபனிடம் உதவியாளராக இருந்த கரு. பழனியப்பன் இந்தப் படத்தை இயக்கப் போகிறார் (தன் குருவின்கனவைத் தான் படத்தின் டைட்டிலில் கூறியுள்ளாரோ?).

"துள்ளுவதோ இளமை"யில் யூத்புல்லாக இசையமைத்த யுவன் ஷங்கர் ராஜா தான் இந்தப் படத்தின் இசையையும்கவனித்துக் கொள்கிறார். காமெடிக்கு விவேக்கும் இருக்கிறார்.

வழக்கமான காதல் கதைதான் என்றாலும் அதைச் சொல்லும் விதம் வித்தியாசமாக இருக்கும். நல்லஎன்டர்டெயினராகவும் இருக்கும் என்று பழனியப்பன் கூறினார்.

வரட்டும், பார்ப்போம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil