»   »  பழனி கோவிலில் தங்கத்தேர் இழுத்த சினேகா.. முண்டியடித்த ரசிகர்களால் பரபரப்பு

பழனி கோவிலில் தங்கத்தேர் இழுத்த சினேகா.. முண்டியடித்த ரசிகர்களால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழனி: நடிகை சினேகா நேற்றிரவு பழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். சினேகா தேர் இழுத்தபோது அவரைக் காண முண்டியடித்த ரசிகர்களால் அங்கு லேசான பரபரப்பு ஏற்பட்டது.

நடிகை சினேகா-பிரசன்னா தம்பதியர் நேற்றிரவு தங்கள் மகன் விகானுக்கு நேர்த்திக்கடன் செலுத்த பழனி முருகன் கோயிலுக்கு வந்தனர்.

Sneha-Prasanna Couple Darshan in Palani

பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தபின் சினேகா-பிரசன்னா இருவரும் சேர்ந்து தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.

பின்னர் தங்கள் குழந்தை விகானை விகானை தங்க தொட்டிலில் போட்டு நேர்த்திக்கடன் செய்தனர். சினேகா தம்பதியரை கண்டதும் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் சினேகாவை பார்க்க முண்டியடித்தனர்.

இதனால் சிறிதுநேரம் பழனி முருகன் கோயிலில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி அங்கு நடந்த காலைநிகழ்ச்சிகளில் தம்பதியர் இருவரும் கலந்து கொண்டனர்.

English summary
Actress Sneha-Prasanna Couple Yesterday Darshan in Palani Temple.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil