»   »  சினேகாவுக்கு 7 மாதம்.. ஸ்டார் ஹோட்டலில் வளைகாப்பு… மீனா, சங்கீதா வாழ்த்து!

சினேகாவுக்கு 7 மாதம்.. ஸ்டார் ஹோட்டலில் வளைகாப்பு… மீனா, சங்கீதா வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சினேகாவின் வளைகாப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிபிராஜ், நரேன், நடிகைகள் மீனா, சங்கீதா, பாடகர் கிருஷ், டைரக்டர் ஹரியின் மனைவி பிரீதா ஹரி ஆகியோர் பங்கேற்று சினேகா - பிரசன்னாவை வாழ்த்தினர்.

விரும்புகிறேன் படம் மூலம் அறிமுகமான சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினேகா - பிரசன்னாவின் திருமணம் கடந்த 2012ம் ஆண்டு மே மாதம் 12ம்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்றது.

சினேகா - பிரசன்னா

சினேகா - பிரசன்னா

திருமணத்துக்குப்பின்னர் சினேகாவும் பிரசன்னாவும் இணைந்து பல்வேறு விளம்பரங்களில் ஜோடியாக நடித்தனர். டிவி நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கினார் சினேகா. கடந்த சில மாதங்ளுக்கு முன்னர் சினேகா கர்ப்பமடைந்தார். இதனையடுத்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தார் சினேகா.

7 மாத கர்ப்பம்

7 மாத கர்ப்பம்

சினேகா தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு வருகிற ஆகஸ்டு மாதம் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று காலையில் சினேகாவிற்கு வளைகாப்பு நடைபெற்றது.

ஜொலித்த சினேகா

ஜொலித்த சினேகா

ரோஸ் நிற காஞ்சிப்பட்டு அழகான அளவான மேக் அப் கை நிறைய வளையல் என தேவதையாய் ஜொலித்தார் சினேகா. புதிய படமொன்றில் நடித்துவரும் பிரசன்னாவும் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பிரசன்னா குடும்பத்தினர்

பிரசன்னா குடும்பத்தினர்

இந்த நிகழ்ச்சியில் சினேகாவின் தந்தை ராஜாராம், தாயார் பத்மாவதி, பிரசன்னாவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாயார் புவனேஸ்வரி மற்றும் நெருங்கிய உறவினர்கள், கலந்துகொண்டார்கள்.

பங்கேற்ற நட்சத்திரங்கள்

பங்கேற்ற நட்சத்திரங்கள்

நடிகர்கள் சிபிராஜ், நரேன், நடிகைகள் மீனா, சங்கீதா, பாடகர் கிருஷ், டைரக்டர் ஹரியின் மனைவி பிரீதா ஹரி ஆகியோர் வளைகாப்பில் பங்கேற்று சினேகா-பிரசன்னா ஜோடியை வாழ்த்தினார்கள்.

English summary
Actor couple Sneha and Prasanna are expecting the arrival of their first baby and the duo organized a baby shower yesterday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil