அழகிய ஃபோட்டோவுடன் வெறுப்பவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த சினேகா

சென்னை : தமிழ் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருந்த சினேகா, நடிகர் பிரச்சன்னாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகி இருந்தார். இவர்களுக்கு விகான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.

குழந்தை பிறந்த பிறகு விளம்பர படங்களில் மட்டும் நடித்து வந்த சினேகா, கடந்த ஆண்டு முதல் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும் சமூக வலைதள பக்கங்களில் தனது அழகிய ஃபோட்டோக்கள், குடும்பத்துடன் முக்கிய நாட்களை கொண்டாடும் ஃபோட்டோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் சினேகா.

Snehas strong message to haters posting adorable photo with son and daughter

அப்படி அதிகாலையில், தனது மகன் மற்றும் மகளுடன் படுத்திருக்கும் ஃபோட்டோ ஒன்றை நேற்று பகிர்ந்திருந்தார். பைஜாமா அணிந்த படி குழந்தைகளுடன் பாசமாக படுத்திருக்கும் அந்த அழகிய ஃபோட்டோவுடன் தன்னை வெறுப்பவர்களுக்கு ஒரு கடுமையான மெசேஜையும் அவர் பதிவிட்டிருந்தார்.

அதில், என்னை வெறுப்பதற்கு நான் யாருக்கும் காரணம் தருவதில்லை. பொறாமையின் காரணமாக அவர்களே ஏதாவது ஒரு கதையை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஹேப்பி சன்டே என குறிப்பிட்டிருந்தார். இன்ஸ்டாகிராமில் சினேகாவின் இந்த பதிவை 1.67 லட்சம் பேர் லைக் செய்து, கமெண்ட் செய்துள்ளனர்.

Recommended Video

Sneha Prasanna's Daughter First Birthday Celebration | Aadhyantaa, Vihaan

நீண்ட இடைவெளிக்கு பிறகு 2020 ல் தனுஷுக்கு ஜோடியாக பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். தற்போது துல்கர் சல்மான் நடிக்கும் வான் படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பிரியா பவானிசங்கர், கல்யாணி பிரியதர்ஷன் போன்றோரும் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X