»   »  ஜெயம் ரவி அண்ணனுக்காக 'பெட்ரோமாக்ஸ் லைட்'டை விட்டுக் கொடுத்த சினேகா

ஜெயம் ரவி அண்ணனுக்காக 'பெட்ரோமாக்ஸ் லைட்'டை விட்டுக் கொடுத்த சினேகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்க சினேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

கர்ப்பம், பிரசவம் என்று படங்களில் நடிக்காமல் இருந்தார் சினேகா. தற்போது மகனுக்கு ஒரு வயது நிறைவடைந்துவிட்டதையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க வந்துள்ளார்.

அம்மா ஆகிவிட்டாலும் படங்களில் அக்கா, அண்ணியாக எல்லாம் நடிக்க மாட்டேன், ஹீரோயின் மட்டும் தான் என கறாராக கூறுகிறாராம்.

மம்மூட்டி

மம்மூட்டி

மலையாளத்தில் மம்மூட்டியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பார் என்று கூறப்பட்டது. தற்போது மம்மூட்டி பட ஹீரோயின் ஆகியிருப்பது சினேகா.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் சினேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இல்ல பாஸ், ஹீரோயின் இல்லை. ஆனால் படம் முழுக்க வரும் வகையில் முக்கிய கதாபாத்திரமாம்.

பஹத் பாசில்

பஹத் பாசில்

நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். சினேகா பஹதுக்கு ஜோடி என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்கவில்லையாம்.

சினேகா

சினேகா

2001ம் ஆண்டு வெளியான என் முதல் படமான ஹனுமான் ஜங்ஷனில் சினேகா நடித்தார். தெலுங்கு படமான அதில் சினேகா அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது இரண்டாவது முறையாக சினேகாவுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி என்று மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.

English summary
Sneha is part of Sivakarthikeyan's upcoming movie to be directed by Mohan Raja.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil