»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ஸ்னேகா கார் விபத்தில் படுகாயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கும் நடிகை ஸ்னேகா. இவர் சென்னையிலிருந்து கார் மூலம் நேற்றுமுன்தினம் தனது தாயார் பத்மாவதியுடன் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தார். படப் பிடிப்புக்காக அவர் சென்று கொண்டிருந்தார்.

நள்ளிரவில் ரேணிகுண்டா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் மீது லாரி மோதியது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்துமரத்தில் மோதி நொறுங்கி கவிந்தது. இந்த விபத்தில் ஸ்னேகா படுகாயமடைந்தார். அவரது கால் முறிந்தது.

தாயார் பத்மாவதியும், டிரைவரும் கூட பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து மூவரும் வேறொரு கார் மூலம் உடனடியாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டனர். போரூர் ராமச்சந்திராமருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஸ்னேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது அனைத்துப் படப் பிடிப்புகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. சம்பவத்தைக் கேள்விப்பட்டு பல நடிகர்களும் அவரை மருத்துவமனையில் போய் பார்த்தனர். 4 வாரங்கள் அவர்ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவர் நடித்த முதல் படமான விரும்புகிறேன் இன்னும் வெளியாகவில்லை. ஆனாலும் என்னவளே, ஆனந்தம், புன்னகை தேசம், பம்மல்கே. சம்பந்தம், சமீபத்தில் வெளியான உன்னை நினைத்து ஆகிய வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின்படப்பிடிப்பில் ஸ்னேகாவின் உதட்டை ஷாம் கடித்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil