twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கட்டைக்கூத்து கலைஞனாக கவிஞர் சினேகன் நடிக்கும் 'பொம்மி வீரன்'

    By Shankar
    |

    யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான கவிஞர் சினேகன், உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார்.

    அதன் பிறகு தற்போது இராஜராஜ சோழனின் போர்வாள் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

    Snehan plays lead role in Bommi Veeran

    இப்போது பொம்மிவீரன் என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த பொம்மி வீரன் படத்தில் இவர் ஒரு கட்டைக்கூத்து கலைஞனாக நடிக்கிறார்.

    இதற்காக இவர் கட்டைக்கூத்து கலைஞர்களை நேரில் சந்தித்து பிரத்யேகமாக பயிற்சியும் எடுத்திருக்கிறார். அவர்களின் வாழ்வு முறைகளை அறிய அவர்களோடு பழகி தன்னை ஒரு முழுமையான கட்டைக்கூத்து கலைஞனாகவே மாற்றிக் கொண்டாராம் சினேகன்.

    நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வியலோடு இப்படத்தின் கதை வேறு ஒரு வித்தியாசமான தளத்தில் பயணிக்கும் என்கிறார் படத்தின் இயக்குநராக அறிமுகமாகும் ரமேஷ் மகாராஜன்.

    இப்படத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கை குறிப்புகளை சேகரித்து அதை புத்தகமாக பதிவு செய்து அதனை அரசின் பார்வைக்கு கொண்டு செல்லவும் திட்டமிட்டு உள்ளார்களாம்.

    தாஜ்நூர் இசை அமைக்க, சாலைசகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

    இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் இயக்குநர் பாக்யராஜ், ஊர்வசி, சிங்கம்புலி, பவர்ஸ்டார் சீனிவாசன், சந்தானபாரதி, டி.பி.கஜேந்திரன், முத்துக்காளை, அறிமுக கதாநாயகி நாட்டியா, ஆனந்தி, கன்னிகா என ஏராளமான நட்சத்திர பட்டளாமே நடிக்கிறார்கள்.

    English summary
    Poet Snehan has signed a new movie as hero in which he plays as Kattaikoothu Player.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X