twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்ல கதை இருந்தா போதுங்க.. நான் சும்மாவே பாட்டெழுத ரெடி! - சினேகன்

    By Shankar
    |

    சென்னை: நல்ல கதையோடு வருபவர்களுக்கு நான் இலவசமாகக் கூட பாட்டெழுத தயார் என்று இயக்குநர் சினேகன் கூறினார்.

    முக்தா என்டர்டெயின்ட் பிரைவேட் லிட் நிறுவனம் சார்பாக முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ஆர்.கோவிந்த், புன்னகை பூ கீதாவின் எஸ்.ஜி. பிலிம்ஸ் பிரைவேட் லிட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் 'சிவப்பு'.

    இப்படத்தை சத்ய சிவா இயக்குகிறார். இதற்கு முன் அவர் கழுகு படத்தை இயக்கினார். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்கிறார்.

    Snehan ready to write free for good stories

    இப்படத்தில், நவீன்சந்திரா கதாநாயகனாகவும், ரூபா மஞ்சரி கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், தம்பி ராமையா, சோனா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

    இப்படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் முக்தா சீனிவாசன், கேயார், சிவா, நடிகர்கள் சிவகுமார், சரத்குமார், ராஜ்கிரண் இயக்குனர்கள் சமுத்திரக்கனி, ஜீவா சங்கர், ஜே.எஸ்.நந்தினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    விழாவில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியிடப்பட்டது.

    இவ்விழாவில் பேசிய சரத்குமார், "இயக்குனரை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும். மிகவும் துணிச்சலோடு இப்படத்தை இயக்கியிருக்கிறார்," என்று நம்புகிறேன். டிரைலரில் ராஜ்கிரண் பேசும் வசனமான 'இலங்கை தமிழர்களுக்கு எல்லோரும் இணைந்து ஆதரவு கொடுப்போம், இல்லையென்றால், விட்டுவிடுவோம். அதை விடுத்து அவர்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்,' வசனம் உண்மையிலேயே சிந்திக்க வேண்டியது. இன்றைய காலக்கட்டத்தில் நடக்கக்கூடியது இதுதான். இந்த படம் ஒரு சிறந்த படமாக இருக்கும் என்பதற்கு இதுவே சான்று," என்றார்.

    பாடல் எழுதிய சினேகன் பேசுகையில், நல்ல கதைக்களம் கொண்ட இந்த படத்திற்கு பாடல் எழுத வைத்ததற்கு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப் படத்தின் பாடல்கள் எதார்த்தனமான காட்சிகளை வைத்து படமாக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் சொல்லக்கூடிய படமாகவும் இப்படம் அமைந்துள்ளது. இம்மாதிரியான படங்களை இயக்குனர்கள் எங்களிடம் கொண்டு வந்தால் இலவசமாகக் கூட பாடல்கள் எழுத தயாராக இருக்கிறோம்," என்றார்.

    Read more about: snehan சினேகன்
    English summary
    Poet Snehan says that he is ready to write lyrics freely for good stories.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X