சினேகன் மனைவிக்கு இவங்க கொடுத்த கல்யாண பரிச பாருங்க... மகிழ்ச்சியில் கன்னிகா

சென்னை : பாடலாசிரியர் சினேகன் - கன்னிகா ரவியின் திருமணம் ஜுலை 29 ம் தேதி சென்னையில் நடைபெற்றது. நடிகர் கமல் மற்றும் இயக்குனர் பாரதிராஜா தலைமையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் காலம் என்பதால் மிகக் குறைந்த அளவிலான பிரபலங்களே இவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ் சினிமாவில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் 2500 க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் சினேகன். இவர் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு, இரண்டாவது பரிசினை வென்றார். அதன் பிறகு கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்த சினேகன், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு, தோல்வியடைந்தார்.

இவரைப் போலவே கன்னிகா ரவியும் பல டிவி சீரியல்கள், சினிமாக்களில் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு சீரியலில் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனார். தற்போதும் சில படங்களில் இவர் நடித்து வருகிறார்.

வித்தியாசமான கல்யாண பரிசு

வித்தியாசமான கல்யாண பரிசு

இந்நிலையில் இவர்களின் திருமணத்திற்கு வித்தியாசமான கல்யாண பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி என்ன பரிசு என்றால், கன்னிகா ரவி தற்போது ஹெல்ப் மீ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை தான் படக்குழுவினர் பரிசாக அளித்துள்ளனர். கல்யாண மேடையில் இந்த ஃபஸ்ட்லுக் போஸ்டரை பரிசாக அளித்து, அதை புதுமண தம்பதிகள் கைகளாலேயே வெளியிட வைத்துள்ளனர்.

வெளியிட்ட கன்னிகா ரவி

வெளியிட்ட கன்னிகா ரவி

ஹெல்ப் மீ படம் சைக்கலாஜிக்கல் த்ரில்லர், ஹாரர் படம். மிக திகிலான இந்த படத்தில் வித்தியாசமான ரோலில் கன்னிகா நடித்துள்ளாராம். ஷங்கர் வுட்டி இயக்கும் இந்த படத்தில் சம்பத் ராம் ஹீரோவாக நடிக்கிறார். சூர்யா இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு ஸ்டில்களை கன்னிகா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள் பாப்பா

வாழ்த்துக்கள் பாப்பா

இதே ஃபோட்டோக்களை சினேகனும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன் வெற்றி பெற துடிக்கும் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட படைப்பு வாழ்த்துவோம். வரவேற்போம்...வாழ்த்துக்கள் பாப்பா என ரெட் ஹார்ட் எமோஜியுடன் கேப்ஷன் பதிவிட்டுள்ளார். சினேகனும், கன்னிகாவும் 7 ஆண்டுகளாக காதலித்து, தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சினேகனும் படங்களில் பிஸி

சினேகனும் படங்களில் பிஸி

இவர்களின் பதிவால் சினேகா - கன்னிகா திருமண வாழ்க்கைக்கு மட்டுமல்ல, தற்போது கன்னிகா ரவியின் புதிய படம் வெற்றி பெறவும் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கன்னிகா மட்டுமல்ல சினேகனும் சில படங்களில் நடித்து வருகிறார். கவுதம் கார்த்திக் நடிக்கும் ஆனந்தம் விளையாடும் வீடு, டைரக்டர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் சினேகன் நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் 2 படங்கள்

ஒரே நேரத்தில் 2 படங்கள்

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பதால் திருமணம் முடிந்த அடுத்த நாளே மனைவியை கூட்டிக் கொண்டு ஷுட்டிங்கிற்கு சென்றுள்ளார் சினேகன். இதை ஃபோட்டோவுடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர், கன்னிகா உடனான தனது திருமணம் திருப்புமுனை எனவும் சினேகன் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X