Don't Miss!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
தீய சக்தி திமுகவை வீழ்த்த வலிமையான அதிமுக..ஓபிஎஸ் இபிஎஸ் ஒற்றுமை அவசியம்..சொல்கிறார் சி.டி.ரவி
- Finance
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. இனியும் குறையுமா?
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முதல் காதல், திருமணத்துடன் தொடர்கிறது… 7 ஆண்டுக்கு முன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த கன்னிகா !
சென்னை : சினேகனின் மனைவி கன்னிகா தனது ட்விட்டர் பக்கத்தில் 7 ஆண்டுகளுக்கு முன் சினேகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
2014ம் ஆண்டு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
விரைவில் முடிய போகுதா பாண்டியன் ஸ்டோர்ஸ்...பிரபல நடிகை கொடுத்த சூப்பர் அப்டேட்
இந்த புகைப்படம் வைரலாகி வரும் நேரத்தில் அனைவரும் கன்னிகாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் .

கவிஞர் சினேகன்
பாடலாசிரியர், நடிகர், எழுத்தாளர், கவிஞர் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர் சினேகன். இவர் கவிஞர் வைரமுத்துவிடம் 5 வருடம் பணியாற்றி உள்ளார். பின்னர் புத்தம் புது பூவே என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.

ஏராளமான பாடல்கள்
பாண்டவர்பூமி திரைப்படத்தில் இவர் எழுதிய தோழா தோழா பாடல், மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.இவர் இதுவரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி
சினேகன் விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

திருமணம்
சினேகனுக்கும் கன்னிகாவுக்கும் ஜூலை 29ந் தேதி சென்னையில் உள்ள க்ரீன் பார்க் ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக உலகநாயகன் கமலஹாசன் தாலி எடுத்துக் கொடுக்க வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திரைத்துறையைச் சார்ந்த பலரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தை அடுத்து வரவேற்பு நிகழ்ச்சி அழகாக நடைபெற்றது. இதில், பிக் பாஸ் பிரபலங்களான ஆரவ், கணேஷ் வெங்கட், சக்தி, இசையமைப்பாளர் இமான், பாக்யராஜ், இயக்குனர் சுசீந்திரன், சுரேஷ் காமாட்சி உள்ளிடோர் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்தினர்.

7 ஆண்டுகளுக்கு முன் எடுத்த புகைப்படம்
இந்நிலையில், கவிஞர் சினேகனின் மனைவி கன்னிகா தனது ட்விட்டர் பக்கத்தில், 7 ஆண்டுகளுக்கு முன்பு சினேகனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், முதல் காதல், திருமணத்துடன் தொடர்கிறது என்று கூறியுள்ள கன்னிகா, முதல் புகைப்படம் 2014,வாழ்த்திய அனைவருக்கும் நன்றிங்க, கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம் என்றும் பதிவிட்டுள்ளார்.

சீரியலில்
கன்னிகா சினேகன், அமுதா ஒரு ஆச்சரியக்குறி என்ற சீரியலில் நடித்தவர். மேலும், திருமுருகன் இயக்கிய கல்யாண வீடு தொடரிலும், சமுத்திரக்கனியின் சாட்டை படத்திலும் நடித்துள்ளார்.